என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழி"

    • இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார்.
    • இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சரத்குமார் 'ஆழி' படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார். இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

    இந்த நிலையில், 'ஆழி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் சரத்குமார் தாடியுடன் கரடுமுரடான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 



    • சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படத்தை மாதவ் ராமதாசன் இயக்கி வருகிறார்.
    • சரத்குமாரின் பிறந்தநாளான இன்று தொடர்ச்சியாக அப்டேட்டுகளை படக்குழு கொடுத்து வருகிறது.

    1990-களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியான சூரியன், நாட்டாமை, கூலி, ரகசிய போலீஸ், சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'பொன்னியின் செல்வன்', 'வாரிசு' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படத்திலும் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் '888 ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சரத்குமாரின் பிறந்தநாளான இன்று திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சரத்குமாரின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட்டுகளையும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    தி ஸ்மைல் மேன் - ஆழி

    தி ஸ்மைல் மேன் - ஆழி

    அதேப்போன்று மாதவ் ராமதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'ஆழி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


    ×