பிறந்தநாளில் அப்டேட்டுகளை குவிக்கும் சரத்குமார்

சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படத்தை மாதவ் ராமதாசன் இயக்கி வருகிறார்.சரத்குமாரின் பிறந்தநாளான இன்று தொடர்ச்சியாக அப்டேட்டுகளை படக்குழு கொடுத்து வருகிறது.
சரத்குமார்
சரத்குமார்
Published on

1990-களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியான சூரியன், நாட்டாமை, கூலி, ரகசிய போலீஸ், சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'பொன்னியின் செல்வன்', 'வாரிசு' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படத்திலும் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் '888 ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் பிறந்தநாளான இன்று திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சரத்குமாரின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட்டுகளையும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தி ஸ்மைல் மேன் - ஆழி
தி ஸ்மைல் மேன் - ஆழி

தி ஸ்மைல் மேன் - ஆழி

அதேப்போன்று மாதவ் ராமதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'ஆழி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com