என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'தேர்தலுக்கு பின் விஜய் கட்சியை தொடர்வாரா? இல்லையா? என்பது தெரியவரும்' - சரத்குமார்!
- இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக.
- திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்
தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் சரத்குமார்,
"நூறுநாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. வேலையில்லாத இடத்தில் வேலைசெய்துவிட்டு இலவசமாக பணம் கொடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். திமுக எந்த நலத்திட்டங்களையும் வரவேற்பது இல்லை. சாதகமாக இருக்கும் திட்டங்களில் அவர்களின் பெயர்களை போட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக கூறுகிறார்கள். இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக. இப்போதுதான் களத்திற்கு வந்துள்ளார்கள். தங்களின் கொள்கை, கோட்பாடை சொல்லாமல் தனிநபர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
தேர்தலுக்கு பின்தான் அவர் கட்சியை நடத்துவாரா? இல்லையா என்பது தெரியவரும். ஒரு பெண் நிர்வாகி கேட்கும்போது வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பவர்தான் கதாநாயகனாக இருக்கமுடியும். தலைவனாக இருக்கமுடியும். இறங்கி பேசியிருந்தால் இன்று அவர் தூக்கமாத்திரை சாப்பிடிருக்கமாட்டார். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்." என தெரிவித்தார்.
தொடர்ந்து பாஜக தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.






