என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை பாவனா"

    அனோமி படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான 'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.

    'நம்மல்' திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி' படத்தில் அவர் புது கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ளார்.

    வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதையை அமைந்துள்ளார். படத்தில் பாவனா, 'சாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும் நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்புகிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.

    இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர்.

    'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மர்மம், உணர்ச்சி, மற்றும் புத்திசாலித்தனமான விசாரணை ஆகியவற்றின் சங்கமமாக, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.

    இப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பெண் நீதிபதியை நியமிக்க கோரிய நடிகை தரப்பின் கோரிக்கையை, கேரள கோர்ட் நிராகரித்தது. #ActressAbductionCase #Dileep
    கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையை கடத்தி சென்றதாக பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று எர்ணாகுளம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைத்து பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    இதனை எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஏற்க மறுத்தார்.

    இதையடுத்து திலீப் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என பட்டியலிட்டு கோர்ட்டில் மனு செய்யும் படியும், அதனை பரிசீலித்து கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.



    இது போல நடிகை கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் தர வேண்டும் என்று நடிகர் திலீப் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதுகுறித்து நீதிபதி கூறும் போது, குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் அவர்களின் வக்கீல் கோர்ட்டு அறையில் வீடியோ ஆதாரங்களை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ActressAbductionCase #Dileep

    நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிறை சென்று திரும்பிய திலீப், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார். #ActressAbductionCase #Dileep
    பிரபல மலையாள நடிகர் திலீப். கடந்த ஆண்டு நடிகை ஒருவரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். 83 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

    கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்த திலீப், அதில் அடுத்து தான் நடிக்கவிருக்கும் `புரபசர் டிங்கன்' படத்துக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறும், சில நிபந்தனைகளை தளர்த்துமாறும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அந்த மனு விசாரணையில் இருக்கும்போதே நேற்று திடீர் என்று வாபஸ் வாங்கிவிட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால் மனுவை திரும்ப பெற்றுவிட்டதாக திலீப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ActressAbductionCase #Dileep
    ×