என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான டிக்கெட்"

    • சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248 பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.
    • சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. ஆனால் இன்றும், நாளையும் கூடுதல் கட்டணமாக ரூ.8,448 உள்ளது.

    ஆலந்தூர்:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருந்து குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களில், இன்றும் நாளையும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய தென் மாவட்ட மக்கள், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிப்பதால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து உள்ளது. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம், தூத்துக்குடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி டிக்கெட் பெறுவதோடு, பயண நேரமும், கூடுதலாகி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகிவிட்டதால், பயணிகள் சென்னையில் இருந்து, பெங்களூரு வழியாக, மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பயணிகள் கூடுதல் கட்டணம், அதிக பயண நேரத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை-தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,100. ஆனால் பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால் கட்டணம் ரூ.13,400. சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம், ரூ.5,173. ஆனால் பெங்களூரு வழியாக சுற்றி போவதால், ரூ.17,331 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

    சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248 பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.4,121.பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால், ரூ.13,842 கட்டணமாக உள்ளது. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.3,093. பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால் ரூ.8,688 கட்டணம் செலுத்தி செல்கிறார்கள்.

    சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. ஆனால் இன்றும், நாளையும் கூடுதல் கட்டணமாக ரூ.8,448 உள்ளது. தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்வதற்கு போதிய நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தால், பயணிகள் அண்டை மாநிலங்களான திருவனந்தபுரம், பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியது இருப்பதால், கூடுதல் டிக்கெட் கட்டணங்கள் செலுத்துவதோடு, பயண நேரமும் பல மணி நேரம் அதிகமாகி, பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    எனவே விமான நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணிகள் பயணிப்பதற்கு தேவையான அளவு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
    • டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பின்னர் அவற்றை ரத்து செய்யும்போது அவற்றுக்கான 'ரீபண்டு' பணம் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இந்த விதிமுறையில் இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

    அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'ஃப்ரீடம் சேல்' டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது.
    • ஆகஸ்ட் 19, 2025 முதல் மார்ச் 31, 2026 வரையிலான பயணங்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.

    இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 'ஃப்ரீடம் சேல்' டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க்கில் ரூ.1,279 முதல் சுமார் 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகையில் வழங்குகிறது.

    ஆகஸ்ட் 19, 2025 முதல் மார்ச் 31, 2026 வரையிலான பயணங்களுக்கு ஆகஸ்ட் 15 வரை முன்பதிவுகள் திறந்திருக்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உள்நாட்டு விமானங்களுக்கான டிக்கெட் ரூ.1,279 முதல் தொடங்கி சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் ரூ.4,279 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விற்பனை ஆகஸ்ட் 10 முதல் www.airindiaexpress.com மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் செயலியில் தொடங்கியது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை மற்ற அனைத்து முக்கிய முன்பதிவு ஆப்களில் டிக்கெட் கிடைக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 38 உள்நாட்டு மற்றும் 17 சர்வதேச இடங்களை இணைக்கும் 500க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.90, சர்வதேச விமான பயணிக்கு ரூ.150 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

    ஆலந்தூர்:

    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு விமான பயணிக்கும், உள்நாட்டு பயணிக்கும், அதே போல் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிக்கும், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் மாறுபட்ட கட்டணமாக இருக்கும். இந்தியாவில் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில், இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

    சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே, உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும், ரூ.205-ம், சர்வதேச விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும், ரூ.300-ம், விமான நிலைய மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை, மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், மாற்றி அமைத்துள்ளது.

    அதன்படி சென்னை விமான நிலையத்தில் பயணிக்கும், உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.295, சர்வதேச விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் ரூ.450 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.90, சர்வதேச விமான பயணிக்கு ரூ.150 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து ஒன்றாக வசூலிக்கப்படும். அதன்பின்னர் அந்தந்த விமான நிறுவனங்கள், பயணிகளிடம் வசூலித்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும். மேலும் இந்த கட்டணம், பயணிகள் புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் வசூலிக்கப்படும். அந்த பயணி சென்று இறங்கும் விமான நிலையத்தில், மேம்பாட்டு கட்டணம் தனியாக வசூலிக்கப்படமாட்டாது.

    இந்த கட்டண உயர்வு சென்னை விமான நிலையத்தில் மட்டும் இன்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமுல்படுத்தப்படுகிறது. ஆனால் அந்தந்த விமான நிலையங்களில், பயணிகளுக்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தகுந்தாற்போல், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் மாறுபட்டு இருக்கும்.

    இந்த கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படுவதால், பயணிகள் பலருக்கு, இந்த கட்டண உயர்வு பற்றி தெரியாது. எனவே இது மறைமுக கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விமான பயணிகளிடம், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும், சர்வதேச விமான நிலையங்களில், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்கவேண்டும் என்று, இந்திய விமான நிலைய ஆணைய விதிமுறைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம் விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
    • சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367 இன்று ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது.

    ஆலந்தூர்:

    தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை, வரும் திங்கள்கிழமை 15ஆம் தேதியில் இருந்து, 17ஆம் தேதி புதன்கிழமை வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதோடு சனி, ஞாயிறு சேர்ந்து வருவதால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை உள்ளது.

    இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், இறுதி நேரத்தில் சொந்த ஊர் செல்ல, விமான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

    இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கடந்த ஓரிரு நாட்களாகவே பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதை அடுத்து சென்னையில் இருந்து, இந்த நகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு, உயர்ந்து உள்ளன. ஆனாலும் கட்டண உயர்வை குறித்து கவலைப்படாமல், பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு, கூடுதல் கட்டணங்கள் செலுத்தி, விமான பயணம் செய்கின்றனர்.

    சென்னை, தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,624. இன்று கட்டணம் ரூ.13,639. சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367. இன்று ரூ.17,262. சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,264. இன்று கட்டணம் ரூ.11,369.

    சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315. இன்று ரூ.14,689. சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290. இன்று ரூ.11,329.

    இதேபோல் பல மடங்கு கட்டண உயர்வு இருந்தாலும், பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல், தவிக்கின்றனர்.

    எனவே இதைப்போன்ற விழாக்காலங்களில், சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுவது போல், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள், இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

    ×