search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் மருத்துவ கல்லூரிகளில்  50 சதவீத அரசு இடஒதுக்கீடு
    X

    கவர்னர் தமிழிசையிடம் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மனு வழங்கிய காட்சி.

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத அரசு இடஒதுக்கீடு

    • கவர்னர் தமிழிசையிடம் வையாபுரி மணிகண்டன் மனு
    • தனியார் மருத்து வக்கல்லூரிகளும் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக தரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கவர்னர் தமிழிசையை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 7 தனியார் மருத்துவ க்கல்லூரிகள் தங்களின் 50 சதவீத மருத்துவ இடங்களை அரசுக்கு வழங்கு வதாக உறுதியளித்த பின்னரே கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த கல்லூரிகளில் 4 கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொண்டன.

    இதனால் நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரி களில் அரசு ஒதுக்கீடாக ஒரு மருத்துவ இடம்கூட புதுவையை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வில்லை. புதுவையில் மீதம் உள்ள 3 தனியார் மருத்து வக்கல்லூரிகளில் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 3 தனியார் மருத்து வக்கல்லூரிகளும் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக தரவில்லை. ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை மூலம் மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு பெற வே ண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது.

    இத்தகைய சூழலில் 2 மருத்துவ கல்லூரிகளும் கூடுதலாக தலா 100 மருத்துவ இடங்களை உயர்த்திக் கொள்ள தேசிய மருத்துவ ஆணையத்திடம் முதல்கட்ட அனுமதியை பெற்றுள்ளது.

    இந்த 2 மருத்துவ கல்லூரிகளும் 50 சதவீத இடங்களை புதுவை அரசுக்கு கட்டாயம் ஒதுக்கினால் தான் புதுவை அரசு தடையில்லா சான்று வழங்கும் என நிர்பந்திக்க வேண்டும். இதன்மூலம் 100 ஏழை புதுவை மாநில மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே கவர்னர் இதற்கான உரிய நடவடிக்கையை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    Next Story
    ×