search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை திரும்ப பெற முடிவு செய்து இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடு, கண்காணிப்பு கேமராக்கள் திருப்திகரமாக இல்லாதது ஆகியவற்றை காரணமாக சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×