என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது
புதுச்சேரி:
காரைக்கால் கலைஞர் மு.கருணாநிதி புறவழி சாலையில், காரைக்கால் நகர போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் காரைக்காலில் அண்மையில் திருட்டு போன வாகனம் என்று தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது38) என்றும், இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து போலீசார் அவரிடம் இருந்த 8 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.






