என் மலர்tooltip icon

    இந்தியா

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் செயினை பறித்த சிபிஐ-எம் கவுன்சிலர்: கேரளாவில் அதிர்ச்சி
    X

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் செயினை பறித்த சிபிஐ-எம் கவுன்சிலர்: கேரளாவில் அதிர்ச்சி

    • வீட்டில் தனியாக இருந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு.
    • கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து நீக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு.

    கேரள மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் செயின் பறித்த சம்பவத்தில் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் கூத்துபரம்பா நகராட்சி 4ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பி.பி. ராஜேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.

    சம்பவத்தன்று ஜானகி என்ற 77 வயது மூதாட்டில் வீட்டில் தனியாக இருந்த நிலையில், சமைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஹெல்மேட் அணி ராஜேஷ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

    மூதாட்டி சமையலில் மும்மூரமாக இருந்த நிலையில், செயினை பறித்துள்ளார். இதனால் பாட்டி சத்தம் போட அக்கம்பக்கத்தில் உள்ளவர் ஓடிவந்தனர். இருந்தபோதிலும், ராஜேஷ் அவர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியபோது, ராஜேஷ் என கண்டுபிடித்து கைது செய்தனர்.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுதத உள்ளனர். இதனையறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதிர்ச்சி அடைந்தது. அத்துடன் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

    Next Story
    ×