உவரியில் ஆலயத்துக்கு சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

அமலோற்பவம் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அமலோற்பவத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர்.
உவரியில் ஆலயத்துக்கு சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
Published on

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி அமலோற்பவம்(வயது 67).

இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அவர் ஆலயம் முன்பு நின்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அமலோற்பவத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர்.

இதனை அறிந்த அவர் உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com