என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் 7 இடங்களில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்களால் பரபரப்பு
    X

    சென்னையில் 7 இடங்களில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்களால் பரபரப்பு

    • இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
    • இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன் நகையும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரியில் ஒரு பெண்ணிடமும், பள்ளிக்கரணையில் ஒரு பெண்ணிடமும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    காலையில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஒரே நேரத்தில 7 இடங்களில் நடைபெற்றுள்ள நகை பறிப்பு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    Next Story
    ×