என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மிக கனமழை எச்சரிக்கை: நெல்லைக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு
    X

    மிக கனமழை எச்சரிக்கை: நெல்லைக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு

    • மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
    • மிக கனமழை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், நெல்லையில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கனமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 0462- 2501070, 9786566111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×