என் மலர்
நீங்கள் தேடியது "single emergency number"
- பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டிட்வா புயல் எதிரொலியால் நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில் அவசர உதவி எண்கள் அறிவித்துள்ளனர்.
அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 1077 மற்றும் 0431 2418995 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.
அவசர கால கட்டுப்பாட்டு எண் 043651077, வாட்ஸ் அப் எண் 8110005558, கட்டணமில்லா எண் 18002334233 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர கால கட்டுப்பாட்டு எண் 1077 மற்றும் 04364-222588 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
- மிக கனமழை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், நெல்லையில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கனமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 0462- 2501070, 9786566111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.
- மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காரைக்காலில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காரைக்கால் நகராட்சி ஆணையர் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் நகராட்சி இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்குப்பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.
ஆகவே பொதுமக்கள் 04368 222427 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்களின் பகுதிகளில் உள்ள மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, அவசர போலீஸ் உதவிக்கு ‘100’ என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கு ‘101’ என்றும், ஆம்புலன்சுக்கு ‘108’ என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு ‘1090’ என்றும் தனித்தனி அவசர உதவி எண்கள் (ஹெல்ப்லைன்) உள்ளன.
இந்நிலையில், இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவில் ‘112’ என்ற ஒரே உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் ‘911’ என்ற ஒரே எண் இருப்பதுபோல், இந்தியாவில் இதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தில் இணைய ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேக அவசர உதவி மையம் உருவாக்கப்பட வேண்டும். அங்கு அவசர உதவி அழைப்புகளை கையாள பயிற்சி பெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த மையங்கள், மாவட்ட கட்டுப்பாட்டு மையத்துடனும், அவசர உதவி வாகனங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கும். இதை செயல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.321 கோடியே 69 லட்சம் வழங்குகிறது.
இந்த திட்டம், இமாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.
இந்நிலையில், தமிழநாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், வருகிற 19-ந்தேதி இத்திட்டத்தில் இணைகின்றன. படிப்படியாக நாடு முழுவதும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.
இந்த எண் மூலம் உதவி பெறுவதற்கு, தொலைபேசியில் ‘112’ எண்ணை அழுத்தலாம் அல்லது ஸ்மார்ட் போனில் உள்ள எச்சரிக்கை பொத்தானை 3 தடவை விரைவாக அழுத்தினால், அவசர உதவி மையத்துக்கு அழைப்பு சென்று விடும். சாதாரண செல்போனில் 5 அல்லது 9-ம் எண்ணை நீண்ட நேரம் அழுத்தினால், அவசர உதவி மையத்துக்கு அழைப்பு சென்று விடும்.
இதுதவிர, இணையதளம் மூலமாகவும், ‘112’ என்ற ‘ஆப்’ மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென ‘ஷவுட்’ என்ற அம்சமும் உள்ளது. அதை பயன்படுத்தினால், பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் உஷார்படுத்தப்பட்டு உதவிக்கு வருவார்கள். #EmergencyNumber112 #Helpline






