search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கவுன்சிலர்"

    • பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார்.
    • குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது.

    திருவேற்காடு:

    சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. அதில் 10-வது வார்டு கவுன்சிலராக நளினி குருநாதன் இருந்தார்.

    இந்தநிலையில் பெண் கவுன்சிலர் நளினி குருநாதனை, கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதால், சட்ட மீறல்கள் சட்டப்பிரிவு 32-ன் கீழ் கவுன்சிலர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் குறிப்பிட்டு இருந்தார்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். கவுன்சிலரின் குடும்பத்தினரே டெண்டர் எடுப்பது விதிமீறல் ஆகும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தில் தான் கூலி வேலை செய்து வருவதாக குருநாதன் போலியான தகவலை குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் அவர், கடந்த ஆண்டு தனது வார்டில் எந்தவித பணிகளையும் செய்யவில்லை எனக்கூறி வார்டில் உள்ள பெண்களை அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி நகராட்சி கமிஷனர் அறையில் அமர்ந்து அவதூறாக பேசியதாகவும் புகார்கள் வந்தது.

    தொடர்ந்து குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் உண்மையானதாக இல்லை என்பதாலும் பெண் கவுன்சிலர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் மற்றும் கடிதம் வருவதை அறிந்த நளினி குருநாதன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர மன்ற தலைவர் மூர்த்தியிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்தார்.

    கவுன்சிலர் நளினி பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து திருவேற்காடு நகராட்சி இணையதளத்தில் உள்ள கவுன்சிலர்கள் பட்டியலில் இருந்து அவரது புகைப்படம் மற்றும் பதவி உடனடியாக நீக்கப்பட்டது. 10-வது வார்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் இந்திரா. இவர் இன்று தனது கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுண்ணாம்பு மணி மற்றும் அப்பகுதி மக்களுடன் வந்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

    பாளை மனக்காவலன்பிள்ளை நகர் 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த வாரம் சாலை அமைப்பதற்காக மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் சாலை அமைக்க கோரி நேற்று எங்கள் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் சாலை அமைக்கும் பணி பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களிடம் விளக்கம் கூற முடியவில்லை. எனவே எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மனு கொடுக்க வந்த கவுன்சிலர் இந்திரா மற்றும் அவரது கணவர் சுண்ணாம்பு மணி ஆகியோரை கமிஷனரை சந்திக்க காத்திருக்குமாறு கூறினர். உடனே அவர்கள் இருவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு கமிஷனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

    • கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • ஒரு கட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் மன்சூர்(வயது 42). இவர் நெல்லை மாநகராட்சியில் 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் நெல்லை மாநகர இந்து முன்னணி பேட்டை நகர துணைத்தலைவராக உள்ளார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பேட்டை செக்கடி பகுதியில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு இந்த பிரச்சனை தொடர்பாக டவுன் காட்சி மண்டபம் அருகே 2 தரப்பினருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.

    அப்போது அந்த வழியாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் அடி விழுந்தது. இதில் கையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அய்யப்பனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட கவுன்சிலர் தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காயம் அடைந்த அய்யப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோரை டவுன் போலீசார் மீட்டு ஆம்புலன்சு மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக அய்யப்பன் அளித்த புகாரின்பேரில், ஆயுதம் கொண்டு தாக்கியதாக தி.மு.க. கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோதல் சம்பவத்தை தடுக்க சென்ற பேட்டை சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது 3 பிரிவுகளில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த பிரச்சனையில் தொடர்புடைய கவுன்சிலர் ஷேக் மன்சூரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி நிர்வாகி அய்யப்பனை இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.
    • காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியில் மொத்தம் 46 ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் தினந்தோறும் காலை முதல் மதியம் வரை தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களில் பெரும்பாலானோர் கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து வருகின்றனர். இதனால் காலை 6 மணிக்கே அவர்கள் வேலைக்காக வீட்டில் இருந்து புறப்படும் நிலை உள்ளது. இதன்காரணமாக பலர் காலை உணவை சமைத்து கொண்டு வரமுடியாமலும், பலர் சரிவர காலைஉணவு சாப்பிடாமலும் இருந்தனர்.

    இதனை அறிந்த 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கவீ. கணேசன் தூய்மை பணியாளர்களின் பசியை போக்க ஏற்பாடு செய்து உள்ளார். தூய்மை பணியா ளர்கள் 46 பேருக்கும் தினமும் இலவசமாக காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், வடை வழங்கப்படுகிறது. இதற்காக அவர் காலடிப்பேட்டையில் உள்ள தனது வார்டு கவுன்சிலர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்து உள்ளார். அருகில் உள்ள ஓட்டலில் இருந்து டிபன் கொண்டு வரப்படுகிறது. காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை காலை உணவை சாப்பிட 46 தூய்மை பணியாளர்களும் சுழற்சி முறையில் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். காலை உணவுக்காக தினமும் ரூ.1800 செலவு செய்து வருகிறார்.

    மேலும் காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாலும் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கவுன்சிலர் கவீ. கணேசனிடம் கேட்ட போது, தொலைதூர இடங்களில் இருந்து வரும் தூய்மை பணியாளர்கள் காலை உணவு தயார் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் பலர் காலை உணவு சாப்பிட முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு காலை உணவைச் செய்யவோ, வாங்கவோ போதிய பணம் இல்லை.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவாக இட்லி, பூரி, வடகறி, பொங்கல், வடை மற்றும் காபி போன்றவற்றை சொந்த செலவில் வழங்கி வருகிறேன். வார்டு அலுவலகத்தில் காலையில் டீ அல்லது காபி தயாரிப்பதற்காக அவர்களுக்கு கியாஸ் ஸ்டவ் மற்றும் டம்ளர் உள்ளது.

    ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு காலை உணவை வழங்குவதில்லை. தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காலை உணவை வழங்க வேண்டும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசி உள்ளேன். தூய்மை பணியாளர்களின் பசியாற உணவு வழங்குவது மன நிறைவை தருகிறது என்றார்.

    • நான் செய்தியைக் கேள்விப்படவில்லை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன் என்று சொல்லத் தயாராக இல்லை.
    • செய்தியை அறிந்தவுடனேயே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசினேன்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, "விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பள்ளியின் உரிமையாளரான தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    இதே கருத்தை முன் வைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணனும் பேசினார்.

    இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சக்தி நகரில் இயங்கிவரக்கூடிய தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஒன்றில் யூ.கே.ஜி. பயின்று வரும் புதுப்பேட்டையைச் சேர்ந்த 6 வயது சிறுமி 11-4-2023 அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற பின்னர், தனக்கு வயிறு வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, அந்தச் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, அந்தச் சிறுமி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அப்பள்ளியின் தாளாளரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாசலம் நகர மன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே, அவரின் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் நிலை ரத்து செய்யப்பட்டு, கட்சியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

    எங்களது அரசைப் பொறுத்தவரையில், "நான் செய்தியைக் கேள்விப்படவில்லை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்" என்று நான் சொல்லத் தயாராக இல்லை. இந்தச் செய்தியை அறிந்தவுடனேயே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசினேன். சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்து, அது தொடர்பான செய்தியை எனக்குத் தந்தார்கள்.

    இந்த அரசைப் பொறுத்தவரையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம். அந்த வகையில், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுத்திடுவோம் என்பதை இந்த அவையில் நான் உறுதியோடு பதிவு செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 10 மாதங்களாக நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த நான், எனது சொந்த காரணங்களுக்காக இந்த பதவியில் இருந்து விலக கடிதத்தை அளித்து உள்ளேன்.
    • ராஜினாமா செய்த நர்மதா குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று உள்ளார்.

    கோவை:

    பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரான கண்ணுச்சாமி என்பவரது மகள் நர்மதா 7-வது வார்டில் போட்டியிட்டு 611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று அவர் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் அவர், சொந்த காரணங்களுக்காக என்னால் இப்பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், நான் வகிக்கும் நகரமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கி கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் நர்மதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    கடந்த 10 மாதங்களாக நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த நான், எனது சொந்த காரணங்களுக்காக இந்த பதவியில் இருந்து விலக கடிதத்தை அளித்து உள்ளேன். மக்களுக்கு என்னால் முடிந்த பணிகளை செய்வதற்கு வேறு சிறந்த களம் அமையும் என்றும், இது எனக்கான களம் அல்ல என்றும் உணர்ந்து விலகி கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜினாமா செய்த நர்மதா குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். மேலும் குரூப்-1 தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவிற்கு காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரத்தில் வசித்து வருபவர் சாந்தமூர்த்தி (வயது 35). இவர் குமாரசாமிபட்டி பகுதி தி.மு.க செயலாளராகவும், 14-வது டிவிசன் கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு 3 மர்ம நபர்கள் கத்தியுடன் வந்து, கதவை தட்டி உள்ளனர்.

    கவுன்சிலர் சாந்தமூர்த்தி வந்து யார் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் உங்களை பார்க்க வேண்டும், வெளியே வாருங்கள் என்றனர். ஆனால் கவுன்சிலர் சாந்தமூர்த்தி என்ன பிரச்சினையாக இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம் என தெரிவித்தார். உடனே அந்த மர்ம நபர்கள், வெளியே வாடா, உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறினர்.

    இதையடுத்து கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மேலும் அஸ்தம்பட்டி போலீசாருக்கு போன் செய்து இது பற்றி தெரிவித்தார்.

    இதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பாரூக் அலி, தமிழரசன், கர்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர்.
    • கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில் திடீ ரென்று கவுன்சிலர் பாரூக் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 45 வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் காலை 10 மணிக்கு வந்ததால் வழக்கம் போல் கூட்டம் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பாரூக் அலி, தமிழரசன், கர்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர். அப்போது கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில் திடீ ரென்று கவுன்சிலர் பாரூக் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து பாரூக் அலியுடன் வந்த கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்து ஏன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டனர். அப்போது கவுன்சிலர் கணவர் செந்தில் மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. கவுன்சிலர் பாரூக் அலி தாக்கப்பட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

    மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த தி.மு.க. கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×