search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flagpole"

    • கொடியேற்று விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • கொடிக்கம்பம் நிறுவும் பணி நடைபெற்று வந்தது.

    உடுமலை :

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை நகர தி.மு.க. சார்பில் 33 வார்டுகளிலும் கொடியேற்று விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து கிளைகளிலும் கல்வெட்டுடன் கூடிய பீடம் அமைக்கப்பட்டு அதில் கொடிக்கம்பம் நிறுவும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி காந்திசவுக் பகுதியில் கொடிக்கம்ப பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவில் கொடி கம்பபீடத்தை இடித்து விட்டனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த தி.மு.க. நிர்வாகிகள் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உடுமலை நகரச்செயலாளர் வேலுச்சாமி தலைமையில் துணைச்செயலாளர் வக்கீல் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி கொடி கம்பபீடத்தை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.

    • தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.
    • மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி 12-வது வார்டு பிள்ளையார் நகர் பகுதியில் அ.தி.மு.க கொடி கம்பம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

    இந்த நிலையில், அந்தப் பகுதியில் சாலை விரி வாக்கம் என்ற பெயரில் தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.இதுகுறித்து அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அங்கு வந்து கேட்டதற்கு, எந்த ஒரு பதிலும் அளிக்கா மல் உத்தரசாமி வாகனத்தை எடுத்து சென்றார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    தி.மு.க ஒப்பந்ததாரர், அ.தி.மு.க கொடிக்கம்பத்தை இடித்து அகற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களது கொடி கம்பத்தை அமைத்துள்ளனர்.
    • மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அங்குள்ள பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களது கொடி கம்பத்தை அமைத்துள்ளனர்.

    இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கொடி கம்பத்தை வட்டாட்சியர் சரவணன் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திர மூலம் இடித்து அகற்றினர்.

    • மர்மநபர்கள், சேதப்படுத்தி கீழே சாய்த்து விட்டதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் 2 வது வார்டு சேடபாளையம் பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது.

     பல்லடம்:

    பல்லடம் 2 வது வார்டு சேடபாளையம் பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதில் பா.ஜ.க. கொடிக்கம்பமும் உள்ளது. இதனை மர்மநபர்கள், சேதப்படுத்தி கீழே சாய்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் பா.ஜ.க. நிர்வாகி பன்னீர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்தார்.
    • சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகியவைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமா ரசாமிக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தன.

    விழாவில் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்புவழி பாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெ ருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.

    சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சாரி யார்களால் தருமபுரம் ஆதீனம் 27-வதுகுருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னி லையில் நடைபெற்றது.

    இதில் வைத்தீஸ்வரன் கோயில் கட்டளைதிருநா வுக்கரசு தம்பிரான் சுவா மிகள், ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராம.சேயோன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, திமுக பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால. எழிலரசன், மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு ஒன்றுதிரண்டு வந்தனர்.
    • எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே செல்லங்குப்பம் பகுதியில் நேற்று நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு பணிகள் மேற்கொண்டு வந்தனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்‌. பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு சிமெண்ட் கட்டை மற்றும் இரும்பு பைப் அமைக்கும் பணி நடைபெற்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைக்க வேண்டுமானால் வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் உரிய முறையில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்‌. மேலும் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் அமைத்தால் அதனை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‌. இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த பகுதியில் கொடிக்கம்பம் உள்ள நிலையில் எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்.

    அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் உடனடியாக அங்கிருந்து அகற்றி அவர்கள் கொண்டு சென்றனர் . இனி வருங்காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கடற்கரை காந்தி திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் தியாகிகள் சுவருடன் அமைக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    75 ஆண்டை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் 75 நகரங்களில் 100 அடியில் கொடிக்கம்பம் அமைத்து தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது. 

    புதுவையில் கடற்கரை சாலை காந்தி திடலில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு தியாகிகள் சுவருடன் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 100 அடி கொடிக்கம்பத்தில் 30 அடி நீளத்திலும், 8 அடி அகலத்திலும் தேசியக்கொடி பறக்கவிடப்படும். 

    கொடிக்கம்பம் அமையும் இடத்துக்கு பின்புறம் தியாகிகள் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 

    இதில் சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயர், விபரங்கள், கியூ. ஆர்.கோடு ஆகியவை அமைக்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் தியாகிகளின் முழு விபரங்களை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் பிரதமர் காணொலி மூலம் டெல்லியிலிருந்து இதை திறந்து வைக்க உள்ளார்.
    ×