கடலூரில் பரபரப்பு வி.சி.க கொடிக்கம்பம் அமைப்பதை தடுத்து நிறுத்திய போலீசார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு ஒன்றுதிரண்டு வந்தனர்.எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்
கடலூரில் பரபரப்பு  வி.சி.க கொடிக்கம்பம் அமைப்பதை தடுத்து நிறுத்திய போலீசார்
Published on

கடலூர்:

கடலூர் அருகே செல்லங்குப்பம் பகுதியில் நேற்று நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு பணிகள் மேற்கொண்டு வந்தனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்‌. பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு சிமெண்ட் கட்டை மற்றும் இரும்பு பைப் அமைக்கும் பணி நடைபெற்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைக்க வேண்டுமானால் வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் உரிய முறையில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்‌. மேலும் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் அமைத்தால் அதனை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‌. இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த பகுதியில் கொடிக்கம்பம் உள்ள நிலையில் எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்.

அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் உடனடியாக அங்கிருந்து அகற்றி அவர்கள் கொண்டு சென்றனர் . இனி வருங்காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com