என் மலர்
உள்ளூர் செய்திகள்

அஸ்தம்பட்டியில் உடைக்கப்பட்ட அ.தி.மு.க கொடி கம்பம்.
அ.தி.மு.க கொடிக்கம்பம் உடைத்து அகற்றப்பட்டதால் பரபரப்பு
- தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.
- மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி 12-வது வார்டு பிள்ளையார் நகர் பகுதியில் அ.தி.மு.க கொடி கம்பம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் சாலை விரி வாக்கம் என்ற பெயரில் தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.இதுகுறித்து அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அங்கு வந்து கேட்டதற்கு, எந்த ஒரு பதிலும் அளிக்கா மல் உத்தரசாமி வாகனத்தை எடுத்து சென்றார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
தி.மு.க ஒப்பந்ததாரர், அ.தி.மு.க கொடிக்கம்பத்தை இடித்து அகற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






