search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்ற வலியுறுத்தல்
    X

    ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்ற வலியுறுத்தல்

    • 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
    • கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழப்ப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த கட்டிடம் 640 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2000 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

    இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம்எந்தவித பராமரிப்பும்இன்றி பழுதடைந்து காணப்ப டுகிறது.

    இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

    இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுமோ என அஞ்சுகின்றனர்.இந்த பழுதான ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    Next Story
    ×