என் மலர்
நீங்கள் தேடியது "Hurricane winds"
- ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசியதால் மீனவர்கள் குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்து சேதமடைந்துள்ளன.
- இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேசுவரம்
பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று கடந்த 2 நாட்களாக வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் வடகடல் மற்றும் தென் கடல் பகுதிகளில் கரையோரங்களில் பலத்த அலையுடன் கூடிய காற்று வீசி வருகின்றன. கடற்கரையோரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை தாண்டி ராட்சத அலைகள் அடித்து வருகிறது. இதன் தாக்கமாக பாம்பன் வடக்கு பகுதியில் கடல் கரையோரங்களில் அமைந்துள்ள மீனவர்களின் குடிசைகளில் கடல் நீர் ஏறி கூரையால் அமைக்கப்பட்ட வேலிகள் சேதமடைந்தன.
குடிசை வீட்டிற்குள்ளும் கடல் நீர் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறுகிறது.
நேற்று காலை வழக்கம்போல 8 மணிக்கு சுற்றுலாபயணிகளை ஏற்றிக்கொண்டு படகு போக்குவரத்து நடந்தது. இந்தநிலையில் காலை 10 மணி அளவில் திடீரென கடலில் மாற்றங்கள் ஏற்றப்பட்டது. சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு காலநிலையில் சகஜநிலை திரும்பியதை தொடர்ந்து பகல் 2.45 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை நடந்தது.
இந்தநிலையில் இன்று காலை முதலே கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்றும் வீசியதால் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழுந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
படகு துறையின் நுழைவுவாயிலும் பூட்டப்பட்டிருந்தது. படகு இயங்காதது தொடர்பான அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டிருந்தது. படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இன்று காலை சூரிய உதயத்தை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலில் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல ஏக்கர் நிலம, திடல்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டு விவசாயம் செய்துவந்தனர். ஆறுபாதி மெயின்ரோடு செம்பனார்கோவில் காவல் நிலையம் அருகே வாழை விவசாயம் செய்து வந்த சுப்பையா நாலரை ஏக்கர், பால்ராஜ் ஒரு ஏக்கர் திடல் மற்றும் நிலத்தில் வாழை விவசாயம் செய்துவந்தனர். அது தற்போது தார்போட்டு பிஞ்சும் பூவுமாக இருந்தது. இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததில் முற்றிலும் முறிந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனை வி.ஏ.ஓ. தேவேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:- நாங்கள் இந்த வாழையை வளர்க்க 24 மணிநேரத்தில் நான்கு மணி நேரம் தான் தூங்டுவோம். மீதம் 20 மணி நேரம் இந்த வாழை கொல்லையிலேயே இருந்து பராமரித்துவந்தோம். இதில் பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். சுமார் ஒன்றரை மணிநேரம் காற்றுடன் கன மழை பெய்ததால் வாழை தாருடன் மரங்கள் முறிந்து அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கலெக்டரும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் எங்களுக்கு நிவாரணம் வழங்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடுமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
கோபி அருகே உள்ள நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிங்காட்டுப்புதூர் முள்ளங்கரை அய்யம்புதூர் செல்வபுரம்காலனி உள்பட பல பகுதிகளில் நேற்று கனமழை மற்றும் சூறாவளிக் காற்றும் வீசியது.
இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தது.
கடந்த ஆண்டுகளில் போதிய தண்ணீர் இல்லாததினால் விவசாயம் செழிக்காத நிலையில் விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகினர். அதனை ஈடுகட்டும் வகையில் இந்தாண்டு வாழைமஞ்சள் என பயிர் செய்து வாங்கியுள்ள கடன்களை அடைத்துவிடலாம் என்று எண்ணி இருந்தனர்.
தற்போது அடித்த சூறாவளிக் காற்றினால் அந்த எண்ணமும் சிதைந்து விட்டதாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் செல்வபுரம் காலனியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குஅடித்த சூறாவளிக்காற்றினால் வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து அவை காற்றில் தூக்கிவீசப்பட்டது.
இதில் மேற்க்கூரை ஓடுகள் மற்றும் சிமெண்ட் அட்டைகள் 500 அடி தூரத்திற்கும் மேல் தூக்கிவீசப்பட்டது. இதனால் அப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சூறாவளிக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்துமின் கம்பிகள் அறுந்ததால் நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றியும் வீடுகளில் மேற்கூரை இன்றியும் தவித்துள்ளனர். தினக்கூலிக்கு செல்லும் தங்களது வீடுகள் சேதமடைந்துள்ளதை புதுப்பிக்க வீடுகளின் மேற்கூரைகளை இழந்துதவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
பருவ மழை தொடங்கியதையொட்டி ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் நேற்று மாலை முதல் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடல் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. நாட்டுப் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் அதே நிலைதான் நீடிக்கிறது.
பாம்பன் ரெயில் பாலத்தில் அலைகள் பல அடி தூரத்துக்கு எழும்பியதால் ரெயில் மெதுவாகவே இயக்கப்பட்டது.