என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள்.
பூதலூர் பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி
- சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் இலை கருகல் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.
- 23 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பூதலூர்:
பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் நடப்பு ஆண்டு சம்பா மற்றும் தாளடி நடவு பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் . வானம் குளிரான பருவத்தில் இருந்தபோதிலும் வயலில் களை எடுக்கும் பணிகளும், உரமிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் வானம் மப்பும் மந்தாரமும் ஆக பனி சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்களில் இலை கருகல் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இன்னும் சில விவசாயிகள் முன்கூட்டியே பூச்சிக்கொல்லி மருந்துகளை கை ஸ் பிரேயர் மூலம் தெளித்தும் வருகின்றனர்.
பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு ஆண்டு 25 ஆயிரத்து 205 ஏக்கர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் 8353 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாகவும் வேளாண்மை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






