என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பண்ருட்டியில் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்
  X

  பண்ருட்டி 4 மணி சந்திப்பில் இன்று அதிகாலைகனமழை காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டபடி செல்லும் காட்சி.

  பண்ருட்டியில் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.
  • மழை நீரை அகற்றும் பணியில்கொட்டும் மழையிலும்அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் நேற்றுஇரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடுகிறதுபண்ருட்டி போலீஸ் லைன் 3வது தெருவில் மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏரி,ஆறு,குளங்களில் நீர் நிரம்பி வழிகிறது. கனமழை காரணமாக வருவாய்த்துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது அலுவலகங்களில் தங்கி இருந்து மழை பாதிப்புகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில்கொட்டும் மழையிலும்அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  Next Story
  ×