search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "liquor store"

  • எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.
  • மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

  புதுச்சேரி:

  புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடை, பார்கள் உள்ளது.

  கோடை வெயில் தொடங்கியதால் பெரும்பாலான மது பிரியர்கள் பீர் வகைகளை அதிக அளவு வாங்கி அருந்துகின்றனர்.

  பீர்கள் 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்க கால நிர்ணயம் உள்ளது. பீர் தயாரிக்கும் தொழிற் சாலைகளில் இருந்து வாங்கி வரப்படும் பீர் வகைகள் சில மதுபான கடைகளில் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.

  அதோடு பண்டிகை காலங்களில் அதிக அளவில் பீர் வியாபாரம் ஆகும் என கருதி மதுக்கடை உரிமையாளர்கள் பெட்டி பெட்டியாக பீர் வகைகளை வாங்கி குடோன்களில் சேமித்து வைக்கின்றனர்.

  ஆனால் எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.

  இதனால் காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு மதுபான கடைகள் ரூ.20 தள்ளுபடி அளித்து விற்பனை செய்கின்றன. ரூ.120 மதிப்பிலான பீர்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

  மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
  • மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள்.

  மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார்.

  சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.


   இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று,'மொபைல் செயலி' மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

  இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை. சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளது.

  • பிக் பாப்'ஸ் அங்காடியில் மதுபானம் விற்பனையாகிறது
  • கரன் விசாரிக்க தொடங்கியதும் அந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

  கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சுமார் 30 கிலொமீட்டர் தொலைவில் உள்ளது மேற்கு கொவினா (West Covina) பகுதி.

  இதன் மேற்கு ப்யுன்டே நிழற்சாலையில் (West Puente Avenue) "பிக் பாப்'ஸ் லிக்கர்ஸ் அண்ட் மார்கெட்" எனும் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பலவிதமான மக்களுக்கு தேவையான பொருட்களுடன் பல மதுபானங்களும் விற்பனையாகிறது.

  இங்கு இரு தினங்களுக்கு முன் மாலை 09:00 மணியளவில் 25 வயதிற்கு உட்பட்ட 2 ஆண்கள் பொருட்களை வாங்குவது போல் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், அங்குள்ள பொருட்களை பிறர் கவனிக்காத வகையில் திருட தொடங்கினர்.

  அங்கு மேற்பார்வையில் இருந்த கரன் சிங் (Karan Singh) எனும் 34 வயதான இந்தியர், இவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க தொடங்கினார். அவர்கள் திருடுவதை உறுதி செய்து கொண்ட கரன், அவர்களை இடைமறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் மோதலாக மாறியது.

  இதில் அந்த இருவரும் கரனை திடீரென துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதும் அந்த இருவரும் ஒரு காரில் தப்பி சென்றனர்.

  அதிர்ச்சியடைந்த அந்த அங்காடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் அந்நாட்டு அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்தனர். விரைந்து வந்த சேவை பணியாளர்கள் கரனை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

  இந்த அங்காடியின் உரிமையாளரின் உறவினரான கரன், கடந்த ஒரு வருடம் முன்பு அமெரிக்கா வந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் 12 வயது மகனும் இந்தியாவில் உள்ளனர். மனைவியையும் மகனையும் அமெரிக்காவிற்கு அழைத்து வர பணம் சேமிக்க கரன் தீவிரமாக முயன்று வந்தார்.

  கரனை கொன்றவர்களை பிடிக்க மேற்கு கொவினா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  • பொதுமக்கள், வியாபாரிகள் பஸ் நிலைய பயணிகள் அனைவருக்கும் பெரும் இடையூறாக உள்ள பஸ் நிலைய மதுபானக்கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
  • தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

  உடன்குடி:

  உடன்குடி பஸ்நிலையம் எதிரே உள்ள அரசு மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி வியாபாரிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மதுபான கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  போராட்டம்

  தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விரைந்து வந்து இந்த இடத்தில் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, பேரூராட்சி திடலில் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என கூறினார். இதனை அடுத்து முற்றுகையிட்ட மக்கள் உடன்குடி பேரூராட்சி திடலுக்கு வந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். பேரவை யின் உடன்குடி வட்டார கவுரவ தலைவர் ரவிக்குமார், நிர்வாகிகள் ரமேஷ், சுபாஷ், ராஜாராம், கணேஷ், முருகே சன், பாலசிவசங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள், வியாபாரிகள் பஸ் நிலைய பயணிகள்ள அனைவருக்கும் பெரும் இடையூறாக உள்ள பஸ் நிலைய மதுபானக்கடையை உடனே ஆப்புறப்படுத்த வேண்டும், வியாபாரியைத் தாக்கி காயப்படுத்திய பார் உரிமையாளரை உடனே கைது செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் ஏன இர்ப்பாட்டத்தில் கோஷம் மிட்டனர் இக்.கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைமை ஓருங்கிணைப்பாளர் அருண்குமார், நெல்லை மாவட்ட தலைவர் ராஜசேகர், மற்றும்கணேசன் ஆகியோர் பேசினார்கள். இதில், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட சங்க நிர்வாகிகள் ஜெபகுமார், கார்த்திகேயன், வாகைமணி, புஷ்ப-ங்கம் முத்துக்குட்டி, பொன்பெருமாள், சசிகலா, குமரேசன், மகேஸ்வரன், மகாராஜன், வேல்பாண்டி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலர் பூமயில், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • மது குடிப்பவர்கள் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
  • பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.

  அவினாசி:

  தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் 5320 கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. அரசு விதிப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறான பகுதியில் மதுக்கடைகளை அமைக்க கூடாது. ஆனால் பல இடங்களில் விதிக்கு முரண்பாடாக மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

  அவ்வாறு திருப்பூர் மாவட்டம் அவினாசி கோவை மெயின் ரோட்டில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள மதுக் கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து தொகுதி எம்எல்ஏ.விடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அந்த மது கடை செயல்பட்டு வருகிறது.

  இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அவிநாசி கோவை மெயின் ரோடு சீனிவாசபுரம் பகுதியில் நிறைய குடியிருப்புகள் வணிக வளாகங்கள் உள்ளன. பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அந்த வழியாக சென்று வருகின்றனர் .விளிம்பிலேயே கடை இருப்பதால் மது குடிப்பவர்கள் ரோட்டில் நின்று கொண்டு அங்கேயே மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

  போதை அதிகமான நிலையில் ஆங்காங்கே ரோட்டிலேயே படுத்து கிடக்கின்றனர். இதனால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது.போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள அந்த மதுபான கடையை மூடாமல் அதே பகுதியில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான இடையூறும் இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் செயல்பட்டு வந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளது. மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கும் பணத்தில் இருந்து தங்களுக்கு கமிஷன் வராத கடைகளை அதிகாரிகள் மூடி உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
  • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  சென்னை:

  தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

  இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

  அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

  மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

  இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

  நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

  கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
  • சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

  திருவள்ளூர்:

  விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் இறந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய 7 தாலுகாக்களில் மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

  இந்த கடைகளுக்கு, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து, பீர் வகைகள், மது பானங்கள், தினமும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

  மொத்தம் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில், 56 கடைகளுக்கு அருகில் மட் டும், 'பார்' நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மீதி உள்ள கடைகளுக்கு அருகில் பார்கள் செயல்பட அனுமதியில்லை. ஆனால் சிலர் அனுமதி இன்றி 'பார்'கள் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

  திருவள்ளூர் டோல்கேட் அருகில் திருப்பாச்சூர் ஊராட்சியில் செயல்பட்ட மதுபாரில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த பார் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து திருப்பாச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன் முன்னிலையில், போலீசார் மற்றும் கலால் துறையினர் அந்த மதுபாருக்கு சீல் வைத்தனர். இதேபோல் தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் மற்றும் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல் வைக்கப்பட்டது.

  பொன்னேரி வெண்பாக்கம் லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்ட 7 பார்களுக்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி தலைமையில் கலால் தாசில்தார் குமார் துணை வட்டாட்சியர் தேன்மொழி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா முன்னிலையில் பொன்னேரி போலீசார் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்களுக்கு பூட்டு போட்டனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி, எளாவூர் பகுதியில் உள்ள இரண்டு பார்கள் மற்றும் சுண்ணாம்பு குளத்தில் உள்ள ஒரு பார் உட்பட சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட மொத்தம் 71 மதுபார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டு உள்ளது.

  இவ்வளவு நாட்கள் அனுமதி இன்றி இந்த மதுபார்கள் செயல்பட்டது எப்படி? அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரா? மதுபார்கள் யாரின் கட்டுப் பாட்டில் செயல்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அனுமதியின்றி செயல்படும் மதுபார்கள் பற்றிய விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 71 மதுபார்கள் ஒரே நாளில் சீல்வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • சாமுவேல் புதுவை மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு பண்ருட்டிக்கு திரும்பினார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடலூர்:

  பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல். கொத்தனார். இவரது மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக பண்ருட்டி வந்தார்.

  அங்கிருந்து பஸ் மூலம் புதுவை மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு பண்ருட்டிக்கு திரும்பினார். நேற்று பிற்பகல் 2 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்த போது வெய்யில் தாங்காமல் மயங்கி விழுந்தார். இவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
  • கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

  புதுச்சேரி:

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை யில் காரைக்கால் மாவட்ட துணை கலெக்டரும், கலால்துறை அதிகாரியுமான ஜான்சன், வட்டாட்சியர் மதன்குமார் மற்றும் பலர், மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கு மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சாராயக் கடைகளில், அதி ரடி சோதனை மேற்கொ ண்டனர்.

  இந்த சோதனையின் போது, மதுபானக் கடை மற்றும் சாராயக்கடைகளில் காலாவதியான மது பாட்டில்கள் உள்ளதா? எனவும், மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு மது விற்பனை செய்யப்ப டுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் முறை யாக கணக்குகளை பராமரி க்காத மதுபான கடைகளுக்கு கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், காரைக்கால் பகுதியில் இருந்து தமிழக த்துக்கு மது கடத்தலை எல்லையோரங்களில் கண்காணிக்கவும், அரசால் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் கப்புகள் பயன்ப டுத்தும் மதுபான கடைக ளுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.