

கடலூர்:
பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல். கொத்தனார். இவரது மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக பண்ருட்டி வந்தார்.
அங்கிருந்து பஸ் மூலம் புதுவை மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு பண்ருட்டிக்கு திரும்பினார். நேற்று பிற்பகல் 2 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்த போது வெய்யில் தாங்காமல் மயங்கி விழுந்தார். இவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.