வீரபாண்டி பகுதியில் மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

வீரபாண்டி:

திருப்பூா் வீரபாண்டி அருகே உள்ள பலவஞ்சிபாளையத்தில் இருந்து காளிகுமாரசாமி கோவிலுக்கு செல்லும் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.இந்தத் சாலையானது தாராபுரம் சாலைக்கு சென்றடைவதால் வாகனப் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளது.

காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் மதுப்பிரியா்கள் மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனா். மேலும் பகல் நேரங்களில் சாலையோரம் அமா்ந்து மது அருந்துவதால் இந்த சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com