வள்ளியூரில் சூப்பர் மார்க்கெட்டில் பணம்-பொருட்கள் திருட்டு

வள்ளியூர் 4 வழிச்சாலை கேசவனேரி ரோட்டை சேர்ந்தவர் இசக்கிமுத்து . இவர் வீட்டின் முன் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.அங்கு வைக்க்பபட்டிருந்த ரூ. 7 ஆயிரம் பணம் மற்றும் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருட்டு போயிருந்தது.
முகமூடி அணிந்த வாலிபர் நிதானமாக நாற்காலியில் அமர்ந்தவாறே பணத்தை திருடிச் செல்லும் காட்சி.
முகமூடி அணிந்த வாலிபர் நிதானமாக நாற்காலியில் அமர்ந்தவாறே பணத்தை திருடிச் செல்லும் காட்சி.
Published on

வள்ளியூர்:

வள்ளியூர் 4 வழிச்சாலை கேசவனேரி ரோட்டை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது48). இவர் வீட்டின் முன் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

திருட்டு

நேற்று இரவு இசக்கிமுத்து வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று காலை சூப்பர் மார்க்கெட் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கு வைக்க்பபட்டிருந்த ரூ. 7 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் முகமூடி அணிந்த ஒரு வாலிபர் நிதானமாக நாற்காலியில் அமர்ந்தவாறு பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. அந்த காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com