search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthikai Deepam"

    • கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி நடைபெற்றது.

    அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.

    மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் பிரகாசிக்கும். மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும்.

    மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் வருகிற 3-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி மகா தன்வந்திரி ஹோமம் நடந்து பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது.

    பூஜை மற்றும் வேள்விகளை வேப்பூர் தங்கதுரை தலைமையில் பாபு அய்யர் செய்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மாவட்ட பொருளாளர் கருணாகரன், ஜோதிடர் கமலக்கண்ணன் மற்றும் கிராமமுக்கிய பிரமுகர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சவாமி தரிசனம் செய்தனர்

    • நேற்று காலை முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது.
    • சூட்டுப்பொத்தையில்முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறங்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி கார்த்திகை தீபம் ஏற்றினார்.

    வள்ளியூர்:

    ெநல்லை மாவட்டம் வள்ளியூர் ஸ்ரீமுத்து கிருஷ்ண சுவாமி 110-வது குருபூஜை தேரோட்டத்திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. 5-ம் திருவிழாவான 22-ந் தேதி கிரிவல தேரோட்டம் நடைபெற்றது.

    பரணி தீபம்

    அதன் பின்னர் 23-ந் தேதி ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜைநடைபெற்றது. 9- ம் திருவிழாவான நேற்று காலை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. பின்னர் பூஜித குரு மாதாஜி வித்தம்மா முன்னிலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    அதன் பின்னர் பரணிதீபத்தில் இருந்து சூட்டுப்பொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறங்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி கார்த்திகை தீபம் ஏற்றினார். பின்னர் மஹாமேரு மண்டபத்தில் சிறப்பு கார்த்திகை வழிபாடு நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா, சபாநாயகர் அப்பாவு, வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கண்ணன், அரசு வக்கீல் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராஜம், பொன்பாண்டி, பாக்கியம், தி.மு.க விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆதி பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முருகன் கோவில் கிழக்கு வாசல் முன்பு சொக்கபனை கொழுத்தப்பட்டது. திருக்கார்த்திகையை யொட்டி வள்ளியூரில் பல்வேறு வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    • தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும்.
    • 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 6-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    • பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது.
    • இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது. இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    இதையொட்டி எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அன்னை காகன்னை ஈஸ்வர் ஆலயத்தில் 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே தீபம் ஏற்றும் 5 அடி உயரத்திலான செம்பு கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டது. மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி தவசிநாதன் பூஜையை நடத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை தீபம் அன்று 2,100 மீட்டர் திரி ,ஆயிரத்து 8 லிட்டர் எண்ணெய்,108 கிலோ கற்பூரம் கொண்டு தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.
    • தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

    மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

    கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • வள்ளியூர் சூட்டு பொத்தை அடி வாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி திருக்கோவில் உள்ளது.
    • கோவிலில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்டத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சூட்டு பொத்தை அடி வாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்டத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று சூட்டுபொத்தை மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் திரு விழாவை முன்னிட்டு பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் அறக்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி திருக்கார்த்திகை தீபம் ஏற்றினார்.

    பின்னர் மாதாஜி அருளாசீர் வழங்கினார். இதில் திரளான பக்தர் கள் பங்கேற்று வழி பட்டனர். இரவு கிருஷணாஞ்சலி அகாடமி சார்பில் பரதநாட்டியம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு குரு ஜெயந்தி ஆராதனை, அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலை 11 முதல் 1 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி 10-ம் நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×