search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chootupotthai"

    • நேற்று காலை முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது.
    • சூட்டுப்பொத்தையில்முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறங்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி கார்த்திகை தீபம் ஏற்றினார்.

    வள்ளியூர்:

    ெநல்லை மாவட்டம் வள்ளியூர் ஸ்ரீமுத்து கிருஷ்ண சுவாமி 110-வது குருபூஜை தேரோட்டத்திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. 5-ம் திருவிழாவான 22-ந் தேதி கிரிவல தேரோட்டம் நடைபெற்றது.

    பரணி தீபம்

    அதன் பின்னர் 23-ந் தேதி ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜைநடைபெற்றது. 9- ம் திருவிழாவான நேற்று காலை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. பின்னர் பூஜித குரு மாதாஜி வித்தம்மா முன்னிலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    அதன் பின்னர் பரணிதீபத்தில் இருந்து சூட்டுப்பொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறங்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி கார்த்திகை தீபம் ஏற்றினார். பின்னர் மஹாமேரு மண்டபத்தில் சிறப்பு கார்த்திகை வழிபாடு நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா, சபாநாயகர் அப்பாவு, வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கண்ணன், அரசு வக்கீல் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராஜம், பொன்பாண்டி, பாக்கியம், தி.மு.க விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆதி பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முருகன் கோவில் கிழக்கு வாசல் முன்பு சொக்கபனை கொழுத்தப்பட்டது. திருக்கார்த்திகையை யொட்டி வள்ளியூரில் பல்வேறு வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    ×