தாழையூத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ரவி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். போலீசார், ரவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாழையூத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த தாழையூத்து வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ரவி(வயது 40). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.நேற்று இரவு குடித்துவிட்டு வந்தவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் வெறுப்படைந்த ரவி தனது மனைவியின் சேலையால் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவரது மனைவி எழுந்து அறைக்கு சென்று பார்த்தபோது ரவி தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ரவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com