தென்காசியில் அரசு பஸ்சில் சென்ற தொழிலாளி திடீர் சாவு

டி.என்.புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்த பாதுஷா கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வருவதற்காக கேரளா அரசு பஸ்சில் பாதுஷா ஏறினார்.
தென்காசியில் அரசு பஸ்சில் சென்ற தொழிலாளி திடீர் சாவு
Published on

நெல்லை:

புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பாதுஷா(வயது 40). இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று நள்ளிரவு கேரளாவில் இருந்து ஊருக்கு வருவதற்காக புறப்பட்ட அவர், கேரளா அரசு பஸ்சில் ஏறினார். இன்று அதிகாலை தென்காசி பஸ் நிலையத்திற்கு பஸ் வந்து நின்ற நிலையில், பாதுஷா மட்டும் இறங்கவில்லை. அவரை கண்டக்டர் எழுப்ப முயன்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த செவிலியர், பாதுஷாவை சோதனைசெய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com