என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    நாங்குநேரி அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • சரஸ்வதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரால் வீட்டு வேலைகளை மேற்கொள்ள முடியவில்லை.
    • வெளி வேலையுடன் சேர்த்து வீட்டு வேலையையும் கவனிக்க முடியவில்லை என்று அடிக்கடி முருகராஜ் கூறி வந்துள்ளார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் மேலபண்டாரபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகராஜ் (வயது53). கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (49). இவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு முருகேஸ்வரி என்ற மகள் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவரால் வீட்டு வேலைகளை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து முருகராஜ் வீட்டு வேலைகளையும் கவனித்து வந்தார். இதில் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு வந்தது. வீட்டு வேலைகளையும், வெளி வேலைகளையும் கவனிக்க முடியவில்லை என்று அடிக்கடி கூறி வந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை முருகராஜ் வீட்டின் முன்புள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் கூரையில் உள்ள கம்பில், நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×