என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது- அரிவாள்கள் பறிமுதல்
    X

    கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அரிவாள்களையும் படத்தில் காணலாம்.


    ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது- அரிவாள்கள் பறிமுதல்

    • முத்து மாரியப்பனுக்கும், மாயகிருஷ்ணனுக்கும் இடையே முன் பகை இருந்து வந்துள்ளது.
    • 4 பேரும் சேர்ந்து எட்டப்பனை தாக்கி கீழே தள்ளி அவரை வெட்ட முயற்சித்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் எட்டப்பன் (வயது 52). கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இவரது மகன் முத்து மாரியப்பன் (24) என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (20) என்பவருக்கும் இடையே முன் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துமாரியப்பன் தற்போது ஜெயிலில் உள்ளார். இதனால் முத்துமாரியப்பனை ஜாமினில் வெளியே எடுக்கும் முயற்சியில் அவரது தந்தை எட்டப்பன் வக்கீலை பார்த்து முயற்சி செய்து வந்துள்ளார்.

    இதை அறிந்த குலசேகர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன்,அவரது தந்தை முருகன் (50), கப்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ரவிராஜ் (46) உள்பட 4 பேர் குலசேகர நல்லூர் வடக்கு தெருவில் வைத்து அங்கிருந்த எட்டப்பனை தாக்கி கீழே தள்ளி வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது எட்டப்பன் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து எட்டப்பன் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட மாயகிருஷ்ணன், முருகன், ரவிராஜ் மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார் உட்பட 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×