என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரத்தை வறட்சி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.


    ஓட்டப்பிடாரத்தை வறட்சி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தல்

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி தலைமையில் நடந்தது.
    • அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் அரசுத்துறை அலு வலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவர்ன கிரியைச் சேர்ந்த கோவில் பிள்ளை என்ற விவசாயி பேசியதாவது:-

    ஓட்டப்பிடாரம் தாலுகா முழுமைக்கும் மழை சரிவர பெய்யவில்லை. எனவே ஓட்டப்பிடாரம் தாலுகாவை வறட்சி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். உளுந்து, பாசிப்பயறு, கம்பு போன்ற பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    மானாவாரி விவசாய நிலங்களில் காற்றாலை கள் அதிகளவில் அமைக்கப்படு வதால் விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. காற்றாலைக்கு அனுமதி வழங்குவதை பரிசீலனை செய்ய வேண்டும்.பெரிய குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு உள்ள அனுமதியை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான ஆழத்திற்கு வண்டல் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பெரியகுளம் நிரம்ப வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிலத்தடி நீரால் பாதிப்பு

    மற்றொரு விவசாயி பேசுகையில், கவர்னகிரி பகுதியில் நிலத்தடி நீரின் தன்மையால் பலர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே கவர்னகிரிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் தாசில்தார் நிசாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்

    Next Story
    ×