ஓட்டப்பிடாரம் அருகே ரூ.33 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல்

கொல்லங்கிணறு ஊராட்சியில்பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.அடிக்கல் நாட்டு விழாவிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
திட்டப்பணிகளுக்கு சண்முகையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டியபோது எடுத்தபடம்.
திட்டப்பணிகளுக்கு சண்முகையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டியபோது எடுத்தபடம்.
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, உயர்நிலை பள்ளியில் பெண்கள் கழிவறை, மந்திகுளம் ஊரணியில் தடுப்புச்சுவர், வாறுகால் மற்றும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் செலவில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், லதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com