என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்"
- ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை
- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹன்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகின.
மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், THE HUNDRED கிரிக்கெட் தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாகக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், The Hundred தொடர் அனைத்து வீரர்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும், வீரர்கள் தேசத்தின் அடிப்படையில் விலக்கப்பட மாட்டார்கள் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாக கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என செய்தி பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை
- இங்கிலாந்தில் இந்த பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹன்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், THE HUNDRED கிரிக்கெட் தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாகக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்பதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயீன் அலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மொயீன் அலி, "இங்கிலாந்தில் இந்த பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது. வீரர்கள் அனைவரும் இதற்கு எதிராகப் பேச வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் கவனம் செலுத்தி, இத்தகைய செயல் நடைபெறாமல் இருப்பதை தடுக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
- பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.
பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.
இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இன்று மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
இன்றைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டாஸ் முடிவிற்கு பிறகு, இரு நாட்டு கேப்டன்களும் பரஸ்பரமாக கை குலுக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியா- பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் மீண்டும் கை குலுக்கலை தவிர்த்து கடந்து சென்றனர்.
- பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் வீரர் சஜித் கான் பேட்டி அளித்தார்.
- 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் தான் ஒரு கேங்ஸ்டராக ஆகியிருப்பேன் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் தெரிவித்துள்ளார்.
நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று பாகிஸ்தான் செய்தி சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இம்ரான்கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என பாபர் அசாம் கூறியுள்ளார்.
- அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இம்ரான்கான் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பை டி20 போட்டியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர்அசாம் தனது 'டுவிட்டர் பக்கத்தில் இம்ரான்கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும்' என பதிவு செய்துள்ளார்.
இதேபோல முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது 'டுவிட்டர் பக்கத்தில், வஜிராபாத்தில் நடந்த நிகழ்வை நினைத்து கவலையடைகிறேன். இம்ரான்பாய் மற்றும் அங்குள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சமயத்தில் ஒரு நாடாக நாம் ஒன்று பட வேண்டும். நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்க கூடாது' என்று கூறியுள்ளார்.
இதேபோல முஸ்தாக் அகமது, உமர்குல், வகாப் ரியாஸ், சோயப்அக்தர், முகமது ஹபீஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இம்ரான்கான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- "டைமிங்" மற்றும் "ஷாட் செலக்ஷன்" ஆகியவற்றில் ஹனிஃப் கை தேர்ந்தவர்
- 1958ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹனிஃப் சாதனை புரிந்தார்
"லிட்டில் மாஸ்டர்."
கிரிக்கெட் விளையாட்டில் இந்த பட்டத்தை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar); அதற்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar).
1971லிருந்து 1987 வரை கவாஸ்கர் இந்தியாவிற்காக 125 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள், 34 சென்சுரிகள், 50க்கும் மேல் சராசரி ரன் குவிப்பு என பெரிய சாதனைகளை புரிந்ததால், சுனில் கவாஸ்கர் "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்படுவது பொருத்தம்தான். டெஸ்ட் விளையாட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் அந்தஸ்தை பெற்றவரும் கவாஸ்கர்தான்.
பவுன்சர்களுக்கு சாதகமான விக்கெட்டுகளில், ஹெல்மெட் அணியாமல், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடியது அவரது சாதனைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
ஆனால், முதல் முதலாக "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்பட்ட சிறப்பான வீரர், கவாஸ்கர் அல்ல.

பாகிஸ்தான் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன், ஹனிஃப் மொகம்மது (Hanif Mohammad), அப்பட்டத்திற்கு சொந்தமானவர்.
1952லிருந்து 1969 வரை அந்நாட்டிற்காக 55 டெஸ்ட் மேட்சுகள் விளையாடி, 3915 ரன்கள் குவித்த ஹனிஃப் மொகம்மது, 43.5 எனும் சராசரியில் ரன்களை குவித்தார்.
பேட்டிங் செய்பவர்களுக்கு அவசியமான "டைமிங்" மட்டும் "ஷாட் செலக்ஷன்" ஆகிய இரண்டிலும் ஹனிஃப் கைதேர்ந்தவர்.
டெஸ்ட் மேட்சுகளில் ஆசியாவிலிருந்து முதலில் 300 ரன்கள் அடித்த பெருமை ஹனிஃபிற்கு உண்டு.

1958ல் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 970 நிமிடங்களில் 337 ரன்கள் அடித்து தோல்வியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கினார்.
2016 ஆகஸ்ட் 11 அன்று தனது 81-வது வயதில், நுரையீரல் நோய் சிகிச்சை பலனின்றி காலமானார்.
முதல் லிட்டில் மாஸ்டரான ஹனிஃப் மொகம்மதுவின் சாதனையை பல வருடங்களுக்கு பின், 1997ல் இலங்கையின் சனத் ஜெயசூரியாவும், 2004ல் வீரேந்தர் சேவாக்கும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.






