search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narendra Modi Stadium"

    • இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது
    • பயனர்களின் "வாலட்" கணக்கில் பரிசு தொகை சேர்க்கப்படும் என்றார் புனீத்

    இந்தியாவில் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைதளமான "அஸ்ட்ரோடாக்" (Astrotalk) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புனீத் குப்தா (Puneet Gupta), இந்தியர்களையும், இந்திய அணியினரையும் உற்சாகப்படுத்தும் ஒரு செய்தியை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளார்.

    2011ல் இந்தியா உலக கோப்பையை வென்ற போது தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ள புனீத், இந்த இறுதி போட்டியில் இந்தியா உலக கோப்பையை வென்றால், அஸ்ட்ரோடாக் வலைதள பயனர்கள் அனைவருக்கும் ரூ.100 கோடி தொகையை சமமாக பகிர்ந்து வழங்க போவதாகவும், பகிர்மான தொகை பயனர்களின் "ஆப் வால்ட்" (app wallet) கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் போட்டி முடிவதற்குள் பலர் இந்த வலைதளத்தில் பயனர்களாக பதிவு செய்யக்கூடும் என்பதால் இதனை சந்தை வியாபார யுக்தி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜோதிட இணையதளமான அஸ்ட்ரோடாக், இன்றைய போட்டியில் யார் வெல்ல போவது என கணித்து தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.
    • இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை வீடியோக்கள் வைரல்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு நாளை மதியம் 1.30 மணியளவில் விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.

    இதற்கான ஒத்திகை நேற்று துவங்கிய நிலையில், இன்றும் விமானப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

    • அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
    • இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை பார்வையாளர்கள் அதிக அளவில் கண்டுகளித்தனர்.

    அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அங்கு நடைபெற்ற ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து, 566 பேர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்நிலையில், பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது.

    இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்... இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    ×