2026 டி20 உலக கோப்பைக்கு இந்தியாவில் 5 மைதானங்கள் தேர்வு - இறுதிப்போட்டி எங்கே தெரியுமா?

2026 டி20 உலக கோப்பையில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த உலக கோப்பையில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.
2026 டி20 உலக கோப்பைக்கு இந்தியாவில் 5 மைதானங்கள் தேர்வு - இறுதிப்போட்டி எங்கே தெரியுமா?
Published on

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. முந்தைய உலகக் கோப்பை போன்றே அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றை எட்டும். போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அவ்வகையில் இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறும் என்றும் ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com