என்னது?... இந்தியா வென்றால் பயனர்களுக்கு பரிசு ரூ.100 கோடியா?

இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறதுபயனர்களின் "வாலட்" கணக்கில் பரிசு தொகை சேர்க்கப்படும் என்றார் புனீத்
என்னது?... இந்தியா வென்றால் பயனர்களுக்கு பரிசு ரூ.100 கோடியா?
Published on

இந்தியாவில் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைதளமான "அஸ்ட்ரோடாக்" (Astrotalk) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புனீத் குப்தா (Puneet Gupta), இந்தியர்களையும், இந்திய அணியினரையும் உற்சாகப்படுத்தும் ஒரு செய்தியை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளார்.

2011ல் இந்தியா உலக கோப்பையை வென்ற போது தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ள புனீத், இந்த இறுதி போட்டியில் இந்தியா உலக கோப்பையை வென்றால், அஸ்ட்ரோடாக் வலைதள பயனர்கள் அனைவருக்கும் ரூ.100 கோடி தொகையை சமமாக பகிர்ந்து வழங்க போவதாகவும், பகிர்மான தொகை பயனர்களின் "ஆப் வால்ட்" (app wallet) கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் போட்டி முடிவதற்குள் பலர் இந்த வலைதளத்தில் பயனர்களாக பதிவு செய்யக்கூடும் என்பதால் இதனை சந்தை வியாபார யுக்தி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜோதிட இணையதளமான அஸ்ட்ரோடாக், இன்றைய போட்டியில் யார் வெல்ல போவது என கணித்து தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com