இந்திய அணிக்கு ராசியில்லாத நரேந்திர மோடி மைதானம் - தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி!

2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய அணியின் சாதனைக்கு தென் ஆப்பிரிக்கா அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்திய அணிக்கு ராசியில்லாத நரேந்திர மோடி மைதானம் - தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி!
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பின்பு நடந்த அனைத்து ஐசிசி தொடர் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய இந்திய அணியின் சாதனைக்கு தென் ஆப்பிரிக்கா அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த 2 தோல்விகளும் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்ததுள்ளதால் இந்திய அணிக்கு ராசியில்லாத மைதானமாக இந்த மைதானம் மாறியுள்ளது என்று இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com