அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி- நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகம்

டி20 உலகக் கோப்பையில் இந்தியா- நமீபியா அணிகள் நாளை மோதுகிறது.அபிஷேக் சர்மா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி- நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகம்
Published on

டெல்லி:

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணி மோதிய முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி 2-வது லீக் போட்டியில் இன்று நமீபியாவுடன் மோதவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவிற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் நாளை நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும், சஞ்சு சாம்சன் ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டிக்குள் அவர் குணமடைந்து திரும்புவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 8 அன்று பயிற்சியாளர் கம்பீர் தனது வீட்டில் இந்திய அணிக்கு இரவு விருந்து அளித்தார். அப்போது அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக் குறைவு (வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல்) ஏற்பட்டதால், மற்ற வீரர்கள் வெளியேறுவதற்கு முன்பே அவர் முன்கூட்டியே கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com