என் மலர்
நீங்கள் தேடியது "Special Intensive Revision"
- வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த 19-ந்தேதி வெளியிட்டார்.
- வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்கிற எஸ்ஐஆர் பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது.
இந்த பணி, கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதியன்று இருந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
அந்த பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி அதனை பூர்த்தி செய்து பெற்று வந்தனர்.

இந்த படிவங்களில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இடம்பெற்று இருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.
இந்த விவரங்கள் இல்லாதவர்கள், தங்களது பெற்றோரின் விவரங்களையும், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த அடிப்படையில், கடந்த 14-ந் தேதி வரை வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த படிவத்தை, பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்ததால் அனைவரும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இந்த படிவத்தை பெற்று கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தின் செயலியில் அதனை பதிவேற்றம் செய்தனர்.
படிவம் கொடுத்த வாக்காளர்கள் விவரம் மட்டுமின்றி, அந்த தொகுதியில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் போன்ற விவரங்களையும் பதிவு செய்தனர். மேலும் இரட்டை பதிவு பெயர்களும் நீக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்திற்கான மொத்த வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த 19-ந்தேதி வெளியிட்டார்.
இந்த வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர். அதாவது, கடந்த அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்தால் சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இது 15.18 சதவீதம் ஆகும்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில்,
வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 6 ஆயிரத்து 332 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 191 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்த வரைவு பட்டியலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மட்டும் 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 பேரும் இருக்கிறார்கள்.
இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றவர்கள் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் ஆகும். இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரியில் வசிக்காதவர்கள் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 ஆகும். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 ஆகும். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரிலும், அதற்கு அடுத்ததாக பல்லாவரம் தொகுதியிலும் அதிகம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல், https://www.elections.tn.gov.in / Electoral-Services.aspx மற்றும் அரசின் மாவட்ட இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில், வாக்காளர்கள் தங்களது பெயர் இருக்கிறதா? என சரிபார்த்து கொள்ளலாம்.
அதுமட்டுன்றி இறப்பு, இடமாற்றம் மற்றும் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்களின் விவரங்களையும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள், பட்டியலில் புதிதாக சேர படிவம்-6 கொடுக்க வேண்டும். அதனை ஆன்லைன் அல்லது வாக்குச்சாவடி அலுவலர்கள் அல்லது வாக்குசாவடி மையங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கொடுக்கலாம். இதற்கு அடுத்த மாதம் 18-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் தான் உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் 5.50 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
அதன்படி பார்த்தால், வாக்காளர் எண்ணிக்கையில் தமிழகம் இப்போது 14 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் (27, 28) வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்நது. இதையடுத்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதற்கிடையில் வாக்காளர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கொடுக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கும் பணியினையும் தொடங்கி இருக்கிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். இந்திய தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக் கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வார்கள்.
இதற்கிடையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மற்றும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து வழங்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளாக 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது. இவர்கள் அந்த பணியினை முழு வீச்சில் இறங்கி செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலானது பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,94,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம்". எனக் குறிப்பிட்டுள்ளார்.
- எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது.
- ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாக்களர்கள் நீக்கம் அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"தமிழ்நாட்டில் SIR கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.
எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது. அன்பார்ந்த வாக்காளர்களே- வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6, அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் வாக்கு நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும்.
இதற்கு உங்களுக்கு நம் அதிமுக கழகத்தின் BLA-2 பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். முதலமைச்சரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது. என் உயிருக்கு உயிரான நம் தொண்டர்களே- SIR கணக்கீட்டுப் பணிகளில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆனால், இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது.
ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை.
அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களை அறிவுறுத்துகிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு, SIR பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் இப்பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த உரிமையான நம் வாக்குகள் உண்மையானதாக இருப்பதை உறுதி செய்ய நடைபெறும் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், தமிழ்நாட்டின் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்ற, 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திடும் வகையில் பணியாற்றிடுவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
- சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 5, 43, 76,755 பேர் உள்ளனர். இடம்பெயர்ந்தோர் பட்டியல் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் படிவம் வழங்காவதவர்கள், பூத் கமிட்டி வாரியாக இரண்டு வாரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதில் வழங்கலாம். பெயர் விடுபட்டவர்கள் இன்றுமுதல் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம். வாக்களர் பூத் கமிட்டிகளில் இந்த பட்டியல் இருக்கும், கொடுக்கப்படும்.
2002, 2005ஆம் ஆண்டுகளில் இடம்பெறாதவர்கள் கொடுத்த படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முகவரியின் இருப்பை வைத்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. முகவரியில் இல்லாதவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர். நடைமுறைகளின் அடிப்படையிலேயே பெயர்கள் நீக்கப்பட்டன. 12 ஆயிரம் பேர் படிவத்தை திருப்பி அளிக்க விருப்பமில்லை." என தெரிவித்தார்.
- தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- இந்தப் பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.
புதுடெல்லி:
காய்கறி வாங்க மார்க்கெட் சென்று கொண்டிருந்தாள் சுமதி. அப்போது எதிரில் வந்த தோழி ரமாவைப் பார்த்தாள். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, யார் இந்த சார் என கேள்விப்பட்டிருக்கேன். இது என்னடி வேற SIR -புதிதாக இருக்கிறதே என ரமாவிடம் ஆச்சரியமாகக் கேட்டாள் சுமதி.
அதுவா ஒண்ணுமில்ல. தேர்தலுக்கான முதல் கட்ட பணி தான் இது. இதனால் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிறைய போலி வாக்காளர்களை நீக்க முடியும் எனறாள் ரமா.
ஆனா பல அரசியல் கட்சிகள் இதுக்கு ஏன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே ஏன்? என்றாள் சுமதி.
இவ்வளவு நாள் தங்களது வாக்கு வங்கியை மெயிண்டெய்ன் பண்ணினவங்களுக்கு இந்த நடவடிக்கையினால அது
குறைஞ்சுடுமோ என்ற பயம்தான் காரணம் என்றாள் ரமா.
ஓ அதுதான் காரணமா? SIR அப்படின்னா என்ன, அதுபத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள் சுமதி.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ரமா சொன்னதன் சுருக்கம் இதுதான்:
வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமை, ஒரு குடும்பம் இடம் பெயர்ந்தும் பழைய முகவரி நீங்காமை, ஒரே நபருக்கு இரட்டை பதிவுகள் இருப்பது போன்ற பொதுவான பிழைகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தன.
இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சாதாரண பட்டியல் புதுப்பிப்பால் சரிசெய்ய முடியாத பல பிரச்சனைகள் இருப்பதால், இந்த ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை பெரும் அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பொருத்தமாக உள்ளனவா, இடம் மாற்றியவர்கள் மாற்றமடைந்து உள்ளனரா, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனவா, ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இடம் பெறுகிறதா போன்ற தவறுகளை சரிசெய்வதே இந்தப் பணிகளின் முக்கிய நோக்கமாகும்.

அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல்களை முன்னிட்டு, துல்லியமான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியமான சூழ்நிலையாக மாறியுள்ளது.
முதலில் பீகாரில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் அதன்பின் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
வரைவுப் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது. அதன்பின் ஜனவரி 15 வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் சமர்ப்பிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.

சிறப்பு தீவிர திருத்த பணிகள் பணிச்சுமையை அதிகரித்துள்ளது எனக்கூறி பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டது பேசுபொருளானது என கூறினாள் ரமா.
ஓகே நானும் SIR விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துட்டேன், நன்றி என கூறியபடி மார்க்கெட் சென்றாள் சுமதி.
- 6.41 கோடி வாக்காளர்களில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற்றுள்ளது.
- இன்று மதியம் 3 மணிவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம்
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (நவ.22) மதியம் 3 மணிவரை 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்தீவு மற்றும் கோவாவில் 100 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99% அதிகமான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50.45 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.






