என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'விருப்பமில்லையென 12 ஆயிரம் பேர் எஸ்ஐஆர் படிவத்தை திருப்பி அளிக்கவில்லை' - அர்ச்சனா பட்நாயக்!
- தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
- சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 5, 43, 76,755 பேர் உள்ளனர். இடம்பெயர்ந்தோர் பட்டியல் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் படிவம் வழங்காவதவர்கள், பூத் கமிட்டி வாரியாக இரண்டு வாரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதில் வழங்கலாம். பெயர் விடுபட்டவர்கள் இன்றுமுதல் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம். வாக்களர் பூத் கமிட்டிகளில் இந்த பட்டியல் இருக்கும், கொடுக்கப்படும்.
2002, 2005ஆம் ஆண்டுகளில் இடம்பெறாதவர்கள் கொடுத்த படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முகவரியின் இருப்பை வைத்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. முகவரியில் இல்லாதவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர். நடைமுறைகளின் அடிப்படையிலேயே பெயர்கள் நீக்கப்பட்டன. 12 ஆயிரம் பேர் படிவத்தை திருப்பி அளிக்க விருப்பமில்லை." என தெரிவித்தார்.






