என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ச்சனா பட்நாயக்"

    • வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது.
    • அடுத்த மாதம் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடைபெறும்.

    இந்த ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள மக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (சனிக்கிழமை), 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), அடுத்த மாதம் 3-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    எனவே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கம் செய்யவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

    முகவரி மாற்றுதல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்யவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்யவும், படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
    • சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

    எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 5, 43, 76,755 பேர் உள்ளனர். இடம்பெயர்ந்தோர் பட்டியல் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. என தெரிவித்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

    தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் படிவம் வழங்காவதவர்கள், பூத் கமிட்டி வாரியாக இரண்டு வாரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதில் வழங்கலாம். பெயர் விடுபட்டவர்கள் இன்றுமுதல் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம். வாக்களர் பூத் கமிட்டிகளில் இந்த பட்டியல் இருக்கும், கொடுக்கப்படும்.

    2002, 2005ஆம் ஆண்டுகளில் இடம்பெறாதவர்கள் கொடுத்த படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முகவரியின் இருப்பை வைத்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. முகவரியில் இல்லாதவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர். நடைமுறைகளின் அடிப்படையிலேயே பெயர்கள் நீக்கப்பட்டன. 12 ஆயிரம் பேர் படிவத்தை திருப்பி அளிக்க விருப்பமில்லை." என தெரிவித்தார். 

    ×