என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்திய தேர்தல் அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகை- சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
- சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
- 13-ந் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை துணை கமிஷனர் மேற்கொள்கிறார்.
சென்னை:
தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். 11-ந் தேதி இரவு சென்னை வரும் அவர்கள், 12 மற்றும் 13-ந் தேதிகளில் சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
12-ந் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டுவிட்டு, அதன் பின்னர் வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
13-ந் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) ஆலோசனை துணை கமிஷனர் மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.






