என் மலர்

  நீங்கள் தேடியது "indian election commision"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்துக் கட்சிகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #ParliamentElection #PMModi
  புதுடெல்லி:

  பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

  இந்நிலையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:

  ஜனநாயகத்துக்கான தேர்தல் திருவிழா துவங்கியது. 2019 லோக்சபா தேர்தலில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இத்தேர்தல் வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்திய குடிமகன்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்து சாதனையை உருவாக்க வேண்டும்.

  பல வருடங்களாக தேர்தல்களை சிறப்பாக நடத்தி வரும் தேர்தல் கமிஷனால் இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளது. தேர்தலை சிறப்பான முறையில் நடத்த தேர்தல் கமிஷன், அதிகாரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  2019 லோக்சபா தேர்தலை சந்திக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கட்சிகளால் நாம் வேறுபட்டு இருந்தாலும் அனைவரது குறிக்கோளும் ஒன்றே. அது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரமளிக்க வேண்டும் என்பதுதான் என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IndianElectionCommision #Twitter
  புதுடெல்லி:

  பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் அன்றாட நிகழ்வுகள் குறித்த தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அதில் டுவிட்டர் வலைத்தளமும் ஒன்று.

  ஆனாலும், பிரபலங்களின் பெயர்களில் போலி அக்கவுண்ட் வைத்து செயல்பட்டு வருபவர்களை கண்டறிந்து டுவிட்டர் நிறுவனம் அவர்களது கணக்குகளை நீக்கி வருகிறது.

  அதன் ஒரு பகுதியாக, இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் 2 போலி கணக்குகள் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த டுவிட்டர் நிறுவனம் இன்று அந்த கணக்குகளை இன்று அதிரடியாக நீக்கியுள்ளது.  இதுதொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக 2 டுவிட்டர் கணக்குகள் இயங்கி வந்தன.  @Election Comm மற்றும் @DalitFederation என்று தனித்தனியான பெயரில் இயங்கி வந்த இந்த கணக்குகளை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வந்துள்ளனர்.

  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு என்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை. இது மக்களை தவறாக வழிநடத்த கூடும் என்பதால், டுவிட்டர் நிறுவனத்திடம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த 2 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது என தெரிவித்தனர். #IndianElectionCommision #Twitter
  ×