என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்ஐஆர்"
- மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
- பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது.
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தின் கங்காசாகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காகப் பயன்படுத்தும் செயலிகள் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டவை.
தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலிகள் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானவை.
இவை முழுக்க முழுக்க பாஜகவின் ஐடி செல் கண்காணிப்பில் இயங்குகின்றன. தேர்தல் ஆணையம் அனைத்தையும் தவறாகச் செய்கிறது. உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகப் பட்டியலிடுகிறார்கள்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது. மக்களின் குரலாக நான் நீதிமன்றம் செல்வேன்" என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
- விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது
இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகம்மது கைப் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்' போது, முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 'புரோஜனி மேப்பிங்' மற்றும் 'செல்ஃப் மேப்பிங்' விவரங்களில் தவறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியின் கீழ் வரும் வார்டு எண் 93-ல் ஷமி ஒரு வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்காக, ஜனவரி 5, 2026 அன்று ஆஜராகுமாறு அவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராஜ்கோட்டில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது என ஷமி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.
ஷமியின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் ஆணையம் இந்த விசாரணையை வரும் ஜனவரி 9 முதல் 11 வரையிலான தேதிகளுக்கு மாற்றியமைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் பிறந்த போதிலும், ஷமி பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.
- வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
- சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த நவ.4-ந்தேதி முதல் டிச.14-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரி இல்லாத 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான விடுமுறை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ வழங்க வேண்டும். அதில் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் உள்ளதை போன்றே, தங்களது அல்லது தங்கள் பெற்றோரின், 2002, 2005-ம் ஆண்டு காலகட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றும், இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர்.
வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்ப்பதற்கு கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து கடந்த 2-ந்தேதி வரையில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து 9575 பெயரை நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளிலும்,அதற்கு அடுத்த வாரம் 17, 18 ஆகிய தேதிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருகிற 18-ந்தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க முடியாது. இதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.
- கோவையில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.அதன் முழுவிவரம் குறித்து பார்க்கலாம்..
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை- 14,25,018 வாக்காளர்கள் நீக்கம்
திருவள்ளூர்- 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
காஞ்சிபுரம்- 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
செங்கல்பட்டு- 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்
தஞ்சாவூர்- 2.06 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
நெல்லை - 2.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
திருச்சி- 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
கரூர்- 79.690 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
நாமக்கல்- 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தென்காசி- 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தேனி- 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
விழுப்புரம்- 1.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அரியலூர்- 24,368 வாக்காளர்கள் நீக்கம்
ஈரோடு- 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்
திருப்பூர்- 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்
கோவை- 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்
கன்னியாகுமரி- 1,53,373 வாக்காளர்கள் நீக்கம்
சிவகங்கை- 1,50,828 வாக்காளர்கள் நீக்கம்
விருதுநகர்- 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்
பெரம்பலூர்- 49,548 வாக்காளர்கள் நீக்கம்
தூத்துக்குடி- 1,62,527 வாக்காளர்கள் நீக்கம்
கடலூர்- 2,46,818 வாக்கார்கள் நீக்கம்
நாகை- 57,338 வாக்காளர்கள் நீக்கம்
மதுரை- 3,80,474 வாக்காளர்கள் நீக்கம்
தருமபுரி- 81,515 வாக்காளர்கள் நீக்கம்
ராமநாதபுரம்- 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்
திண்டுக்கல்- 3,24,894 வாக்காளர்கள் நீக்கம்
கிருஷ்ணகிரி- 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்
திருவாரூர்- 1,29,480 வாக்காளர்கள் நீக்கம்
சேலம்- 3,62,429 வாக்காளர்கள் நீக்கம்
திருப்பத்தூர்- 1,16,739 வாக்காளர்கள் நீக்கம்
நீலகிரி- 56,091 வாக்காளர்கள் நீக்கம்
திருவண்ணாமலை- 2,51,162 வாக்காளர்கள் நீக்கம்
மயிலாடுதுறை- 75,378 வாக்காளர்கள் நீக்கம்
ராணிப்பேட்டை- 1,45,157 வாக்காளர்கள் நீக்கம்
புதுக்கோட்டை- 1,39,587 வாக்காளர்கள் நீக்கம்
கள்ளக்குறிச்சி- 84,329 வாக்காளர்கள் நீக்கம்
வேலூர்- 2,15,025 வாக்காளர்கள் நீக்கம்
மொத்தம்- 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
- சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.
- காற்று மாசு குறித்து விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது/
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 3-ந் தேதி முதல் கூட்டத் தொடரின் அலுவல்கள் நடந்தன.
இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அணுசக்தித் துறையில் தனி யாரை அனுமதிப்பது உள்பட முக்கிய மசோதாக்கள் இரு அவையிலும் நிறை வேற்றப்பட்டன.
மக்களவையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகாமிஷன் (விபி-ஜி ராம் ஜி) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடிய தும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது இந்தக் கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதமாக இருந்தது என்று ஓம் பிர்லா கூறினார்.
மேல்சபை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட மியற்றும் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார்.
பின்னர் மேல்-சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதையடுத்து மேல் சபையிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. இரு அவைகளின் நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இன்று டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் அது குறித்து விவாதிக்கப்படாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது.
- மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
- தலைமை நீதிபதி அமர்வு எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும்.
எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் இதற்குமேல் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
எஸ்ஐஆர் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அமித் ஷா மேலும் கூறியதாவது:-
இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளிடம் இதைப் பற்றி இரண்டு அமர்வுகளுக்குப் பிறகு விவாதிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் ஒப்புக்கொண்டோம்... ஏன் 'இல்லை' என்று சொன்னோம்? 'இல்லை' என்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, அவர்கள் SIR பற்றிய விவாதத்தை விரும்பினர். இந்த சபையில் SIR பற்றிய விவாதம் இருக்க முடியாது என்பதை நான் தெளிவாக அறிவேன். SIR தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.
இந்தியாவின் EC மற்றும் CEC அரசாங்கத்தின் கீழ் செயல்படவில்லை. விவாதம் நடத்தப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதிலளிப்பார்கள்? தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் சொன்னபோது, உடனடியாக ஒப்புக்கொண்டோம்.
இந்த விஷயத்தில் விவாதம் தொடர்பாக முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடை ஏற்பட்டது. இது மக்களுக்கு இதைப் பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்ற தவறான தகவல் பரவியது. இந்த நாட்டில் விவாதங்களுக்கு நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் விவாதங்களிலிருந்து விலகிச் செல்லாது. எந்த விஷயமாக இருந்தாலும், நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
இந்திய வாக்காளர் மட்டுமே இந்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்பதை எஸ்ஐஆர் உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
- எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
எஸ்ஐஆர் பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது, அவை தீர்க்கப்படவில்லை.
இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக திமுக மீது அதிமுக குற்றம்சாட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.
- தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம்.
தமிழகத்தில் 6.24 கோடி வாக்காளர்களுக்கு 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களிடம் பெறப்பட்ட 4.53 கோடி (70.70%) விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- 6.41 கோடி வாக்காளர்களில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற்றுள்ளது.
- இன்று மதியம் 3 மணிவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம்
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (நவ.22) மதியம் 3 மணிவரை 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்தீவு மற்றும் கோவாவில் 100 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99% அதிகமான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50.45 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.






