என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம்."

    • கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது.
    • கடந்த மாதம் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுவதும் 24 லட்சம் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த படிவங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கின்றனர்.

    இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க டிசம்பர் 4-ந்தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இப்பணிக்காக கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த மாதம் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுவதும் 24 லட்சம் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதே போல் 27 லட்சத்து 1050 பேர் நிரந்தரமாக முகவரி மாறி சென்று உள்ளனர். கண்டுபிடிக்க முடியாதவர்கள் எண்ணிக்கை 5.19 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

    ஆக மொத்தம் 59 லட்சம் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இடைக்கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.

    மேலும் நவம்பர் 29-ந்தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 50.91 லட்சம் வாக்காளர்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை இன்னும் சமர்ப்பிக்காமல் உள்ளனர்.

    கணக்கெடுப்பு பணி முழுமையாக முடியும்போது 69 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    அதே சமயம் உண்மையான வாக்காளர்கள் பலரின் பெயர் இடம் பெறாமல் உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்களை கண்டறிந்து அவர்கள் விரும்பும் இடம் தவிர, மற்ற இடங்களில் உள்ள அவர்களின் பெயரை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது.

    • தமிழகத்தில் கடந்த 4-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை SIR பணி நடைபெறும்.
    • கள ஆய்வு மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகிறார்கள்.

    தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2026-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி. பவன், துணை இயக்குநர் மற்றும் தேவன்ஷ் திவாரி ஆகியோர் நவம்பர் 24 முதல் 26-ந்தேதி வரை சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கட்டம்-II குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வார்கள்.

    அதைத் தொடர்ந்து, அவர்கள் கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வார்கள். கூடுதலாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ண குமார் திவாரி, இச்சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் அதன் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தருவார்.

    இதேபோல், மதுசூதன் குப்தா சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்வார்.

    இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
    • வாக்குகள் நீக்கப்பட்டதால்தான் பாஜக கூட்டணி இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது

    பீகார் தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் தேர்தல் ஆணயம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. நேர்மையாக நடந்த தேர்தல்தானா என்கிற அய்யத்தை எழுப்புகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தால் பெற்ற வெற்றியா? அல்லது அக்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான கூட்டணி பலத்தால் கிடைத்த வெற்றியா? என்கிற கேள்வியை எழுப்புவதாக உள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் என்னும் நடவடிக்கைதான் இத்தகு அய்யங்களை எழுப்புவதற்கு அடிப்படையாக உள்ளது.

    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்ககூடிய வாக்காளர்கள் கணிசமான அளவில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதாவது, பீகாரில் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு' நடவடிக்கையின் போது தகுதி வாய்ந்த சுமார் 65 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

    ஆனால், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, அது தொடர்ந்து நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்னும், சுமார் 47 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. ஆயினும், அதனைத் தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

    எஸ். ஐ.ஆர் நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்று வெளிவந்துள்ள முடிவுகள், எஸ்.ஐ.ஆர் மூலம் பெருமளவில் வாக்குகள் நீக்கப்பட்டதால்தான் பாஜக கூட்டணி இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதை உறுதிபட உணர்த்துகின்றன.

    பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில், நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. அவ்வாக்குகள் நீக்கப்படாதிருந்தால் அத்தொகுதிகளில் 'காங்கிரஸ் -ஆர்ஜேடி' கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என்பது உறுதியாகிறது.

    இந்நிலையில், பீகாரில் செய்ததைப் போலவே தங்களுக்கு எதிரான இலட்சக்கணக்கான வாக்குகளை நீக்கிவிட்டுத் தங்களுக்கு ஏற்றபடி தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழ்நாட்டிலும் பாஜக முயற்சிக்கலாம். பாஜகவின் இத்தகைய வாக்குத் திருட்டைத் தடுப்பதற்குத் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிய வந்திருப்பதால், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளிக்கும் என்று நம்புகிறோம்.

    இந்நிலையில், பீகாரில் நடந்தேறியுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் தடுக்க, சனநாயகத்தைப் பாதுகாக்க, பாஜக- தேர்தல் ஆணையம் இணைந்து அரகேற்றவுள்ள கூட்டுச் சதியை முறியடிக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்றும்; மக்கள் நலன்கருதி தொலைநோக்குப் பார்வையோடு ஒருங்கிணைந்து செயல்படவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு.
    • அதனால் தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு.

    மக்களவை எம்.பி. ஆ.ராசா சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த ஆட்சி தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது. 30 வருடங்களாக நான் எம்.பி.யாக இருக்கிறேன். PL2 தெரியுமா? PLC தெரியுமா? (நிகழ்ச்சியில் இருந்தவர்கள் பார்த்து) எதுவுமே தெரியாது.

    தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு. பூத் ஸ்லிப் நம் கையில், வாக்காளர் பட்டியல் நம் கையில், ஸ்லிம் கொடுக்கிறது நம் கையில், சின்னம் கொடுக்கிறது நம் கையில்.

    ஏனென்றால் ஓட்டு போடுறதில் 10 பேர் திருடர்களாக இருப்பார்கள். இதனால் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் நாம் அந்த வேலையை பார்த்தோம். தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு.

    தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் வந்துவிட்டார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. தேர்தல் ஆணையத்தின் திருட்டை தடுக்கத்தான் இவ்வளவு வேலை. இப்படி தடுத்துதான் முதலமைச்சராக வேண்டுமென்றால், வேண்டியதில்லை. வந்துவிடுவார்கள்.

    130, 150 என இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால் அது தமிழ்நாட்டுக்கான தேர்தல். இது தமிழ்நாட்டுக்கான தேர்தல் மட்டுமல்ல. இந்த தேர்தல் இந்தியாவுக்கான தேர்தல். மத்திய அரசுக்கு தற்போது மெஜாரிட்டி இல்லை. தமிழக தேர்தலில் 150 முதல் 200 தொகுதிகளை பிடித்துவிட்டால், பாராளுமன்ற தேர்தல் இல்லாமலேயே மத்திய அரசு மாறும்.

    இவ்வாறு ஆ. ராசா தெரிவித்தார்.

    • ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.

    நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

    அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன

    அப்போது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், " வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் S.Y.குரேஷி, O.P.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடுமையாக விமர்சித்ததுள்ளனர்.

    குடிமகனோ, தேர்தலில் பங்களிப்பாளராக இருப்பவரோ குற்றச்சாட்டு முன்வைக்கும்போது அதை விசாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் வேலையே தவிர, எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.

    மதிக்கத்தக்க இந்த மூன்று பேரது விமர்சனத்திற்கு ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஒடிசாவில் SIR நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) மேற்கொண்டது.

    அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், பீகாரை தொடர்ந்து ஒடிசாவில் SIR (special intensive revision) நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசாவில் 24 வருடங்களுக்கு பிறகு சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.

    • துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
    • இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.

    இதற்காக அந்த உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிப்பது அவசியமாகும். அந்தவகையில் தற்போதைய தரவுகளுடன் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்து இறுதி செய்துள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    • இந்திய தேர்தல் கமிஷன் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது.
    • அதனால்தான் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியதாவது:

    தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமான நடுவர் போல செயல்படுவதே காங்கிரசின் தேர்தல் தோல்விகளுக்கு காரணம்.

    காங்கிரஸ் தொண்டர்களுடன் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கும். தேர்தலை முன்னிட்டு மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுங்கள்.

    சட்டசபை தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் தலைவர்களிடம் நிச்சயம் கருத்து கேட்கப்படும்.

    கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவுட் ஆகும்போது நீங்களே உங்களை சந்தேகிக்கலாம். அப்போது நீங்கள் அவுட் ஆவது உங்கள் தவறல்ல, மாறாக நடுவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதே காரணம் என்பதை கண்டறியலாம்.

    அதைப்போலவே, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது. அதை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் கட்டுப்படுத்துகின்றன.

    தேர்தல் ஆணையத்தின் சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியல் காரணமாகவே 2017-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் நாம் தோல்வி அடைந்தோம்.

    இந்த நாடு ஒரு கோவில் போல. அதில் எல்லாரும் வந்து பிரார்த்தனை செய்யலாம். ஆனால் பிரசாதம் யாருக்கு, என்ன கிடைக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    • பீகாரில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
    • வரும் 25-ம் தேதியுடன் இந்தப் பணி நிறைவு பெற உள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வரும் 25-ம் தேதியுடன் இந்தப் பணி நிறைவு பெற உள்ளது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் இறந்த அல்லது இடம்பெயர்ந்த வாக்காளர்கள் என 52 லட்சம் பேரை நீக்கியுள்ளோம்.

    சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியிடப்படும்.

    இந்தப் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமை. முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • நாடு முழுவதும் நமது அரசியலமைப்பு சட்டம் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது.
    • தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் நலன்களுக்காக பணியாற்றுகிறது என தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நேற்று நடந்த அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மகாராஷ்டிராவைப் போல பீகார் சட்டசபை தேர்தலையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

    நாடு முழுவதும் நமது அரசியலமைப்பு சட்டம் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது.

    இங்கு நேற்று முன்தினம் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் பீகார் தேர்தலை பா.ஜ.க. திருடுவதை தடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

    தேர்தல் ஆணையம் தனது பணியை செய்யவில்லை. மாறாக பா.ஜ.க.வின் நலன்களுக்காக பணியாற்றுகிறது.

    பா.ஜ.க. 5 முதல் 6 முதலாளிகளுக்காக மட்டுமே அரசை நடத்துகிறது. சாதாரண மக்களுக்காக செயல்படவில்லை.

    நீர், காடு மற்றும் நிலம் பழங்குடியினருக்கானது. தொடர்ந்து அவர்களிடமே இருக்கும்.

    பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம் 1996-ஐ ஒடிசா பா.ஜ.க. அரசு அமல்படுத்தவில்லை. பழங்குடியினருக்கு வன உரிமை பட்டாக்கள் வழங்கப்படவில்லை.

    பிஜு ஜனதா தள அரசைப் போலவே பா.ஜ.க. அரசும் ஒடிசாவை கொள்ளையடிக்கிறது என தெரிவித்தார்.

    • தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதுகுறித்து விவாதிக்க விரும்புகிறார்.
    • இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28-ம் தேதி ஒத்திவைத்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள் வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவுத் தரவுகளை அதன் இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன.

    இந்த மனுக்களை திரிணாமுல் காஙகிரஸ் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா மற்றும் என்ஜிஓ அமைப்பும் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சந்தித்து இந்தக் குறையை விவாதிக்க விரும்புவதாக தெரிவித்தார். புதிய தலைமை தேர்தல் ஆணையர் இப்போது இருக்கிறார். மனுதாரர்கள் அவரைச் சந்தித்து இது குறித்து விவாதிக்கலாம் என்றார்.

    இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி, மனுதாரர்கள் தேர்தல் ஆணையத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒரு விசாரணையை நடத்தி அதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கும்

    வாக்குச்சாவடி வாரியான வாக்காளர் வாக்குப்பதிவுத் தரவை அதன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆலோசிக்கத் தயாராக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்ததை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொண்டு, மனுதாரர்கள் 10 நாட்களுக்குள் தேர்தல் குழு முன் பிரதிநிதித்துவங்களைச் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

    இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28-ம் தேதி ஒத்திவைத்தது.

    • மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
    • மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    ×