search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "district secretaries meeting"

    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என பிரேமலதா தெரிவித்தார்.

    சென்னை:

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட செயலாளர்கள் சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

    பெரும்பாலானோர் தனித்துப் போட்டியிடுவோம் என கருத்து பகிர்ந்தனர்.

    இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்துப் பேசுவோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்.

    விஜய பிரபாகரனை ஒரு தொகுதியில் நிற்கவைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    சென்னை ராயப்பேட்டையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11ம் தேதி நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPaneerselvam
    சென்னை:

    அதிமுக தலைமையகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டையில் நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.



    இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPaneerselvam
    சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. #ADMK
    சென்னை:

    சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற 22-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது.

    அ.தி.மு.க. அமைச்சர்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சி பதவிகளை வைத்துள்ளதால் அந்த பதவிகளை பிரித்து பதவி இல்லாத முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    கடந்த வாரம் அ.தி.மு.க.வில் பல்வேறு நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் இன்னும் ஏராளமான எம்.பி., எம்.எல். ஏ.க்கள் கட்சி பொறுப்பு இல்லாமல் உள்ளதாகவும் அப்படிப்பட்ட நிர்வாகிகளுக்கும் கட்சி பொறுப்பு வழங்குவது குறித்து கூட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் பேசுவோம் என்று மாவட்டச் செயலாளர் ஒருவர் தெரிவித்தார்.

    கட்சியில் மாவட்டச் செயலாளர்களுக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அ.தி.மு.க. விழாக்களும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு போதிய கூட்டம் வருவதில்லை என்ற குறைபாடு தற்போது மேலோங்கி உள்ளது.

    இதை சரிசெய்வதற்கான வழிவகை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட கூடும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    ×