search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காத்திருந்து பலனில்லை: அசாமில் வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காத்திருந்து பலனில்லை: அசாமில் வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி

    • அசாமில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது.
    • இந்தியா கூட்டணியுடன் நாங்கள் நிற்கிறோம் என்றார் ஆம் ஆத்மி எம்பி சந்தீப் பதக்.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தலில் அசாமில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது. அதன்படி கவுகாத்தியில் பாபென் சவுத்ரி, தில்பர்காவில் மனோஜ் தன்வார் மற்றும் சோனிபூரில் ரிஷி ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா கூட்டணியுடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாம் இப்போது பேசுவதில் சோர்வடைகிறோம்.

    தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். எங்களுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணியுடன் நாங்கள் நிற்கிறோம்.

    இன்று ஆம் ஆத்மி கட்சி அசாமில் அறிவித்துள்ள 3 வேட்பாளர்களை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என நம்புகிறோம்.

    கூட்டணிக்கு வந்து தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு. நேரமும் வியூகமும் முக்கியம். பேசி அலுத்துவிட்டோம். பேசுவதில் இன்னும் எவ்வளவு நேரம் விரயமாகும்? என கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×