search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "France President"

    இந்தியாவுடனான ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அப்போது நான் பதவியில் இல்லை என கூறினார். #RafaleDeal #EmmanuelMacron
    நியூயார்க்:

    பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

    அதை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில் ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களுக்கான டெண்டரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்து இருந்தார்.

    அது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் அது பற்றி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள அவர் இடைவெளியின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


    அப்போது அவரிடம் ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் புகார் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் ‘‘கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பாரீஸ் வந்த போது ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் போட்டது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம்.

    இந்த விவகாரத்தில் நான் மிக தெளிவாக இருக்கிறேன். இது 2 நாட்டு அரசுகளுக்கு இடையே விவாதிக்கப்பட்டது. அப்போது நான் அதிபர் பதவியில் இல்லை. கடந்த ஆண்டு மே மாதம் தான் நான் அதிபரானேன். இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பே தெளிவாக கூறிவிட்டார்.

    இதுகுறித்து வேறு எதுவும் என்னால் கூற முடியாது. ஏனெனில் நான் அப்போது பதவிலும் இல்லை. நாங்கள் மிக தெளிவான சட்ட திட்டங்களுடன் செயல்படுகிறோம்’’ என சுருக்கமாக முடித்துக் கொண்டார். #RafaleModiKaKhel #RafaleDeal #RafaleScam #FrancePresident #EmmanuelMacron
    நைஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் 2 மணி நேரத்தில் தன்னை சித்திரமாக தீட்டிய 11 வயது சிறுவனை மனமுவந்து பாராட்டினார்.
    லாகோஸ்:

    நைஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் 2 மணி நேரத்தில் தன்னை சித்திரமாக தீட்டிய 11 வயது சிறுவனை மனமுவந்து பாராட்டினார்.

    பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல்மேக்ரான் இருநாள் அரசுமுறை பயணமாக நைஜீரியா நாட்டுக்கு வந்துள்ளார்.

    அபுஜா நகரில் நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக மேக்ரான் ஆலோசனை நடத்தினார்.


    பிரான்ஸ் நாட்டில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள நைஜீரியா கலாசார விழா தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக இங்குள்ள லாகோஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை எம்மானுவேல் வந்தார்.

    இங்குள்ள நியூ ஆப்பிரிக்கா ஷ்ரைன் என்னும் ஓவிய கலைக்கூடத்தை அவர் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பிரான்ஸ் அதிபர் அங்கு வரும் தகவல் தெரிந்ததும் ஓவியக் கலையில் ஆர்வம்கொண்ட கரீம் வாரிஸ் ஒலமிலேக்கான் என்ற 11 வயது சிறுவன், பென்சில் மற்றும் கரி ஆகியவற்றை பயன்படுத்தி இரண்டு மணி நேரத்துக்குள் எம்மானுவேல் மேக்ரானை அழகிய சித்திரமாக தீட்டி முடித்தான்.


    மிகவும் தத்ரூபமாக அமைந்திருந்த அந்த சித்திரத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த பிரான்ஸ் அதிபர் அந்த சிறுவனை மகிழ்ச்சியுடன் பாராட்டி, ஆசி கூறியதுடன் இந்த சம்பவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார். #NigerianArtist #EmmanuelMacronportrait 
    பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #Sushmaswaraj #EmmanuelMacron

    பாரீஸ்:

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

    இந்த பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்தும், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, இத்தாலியில் புதியதாக பிரதமர் பொறுப்பேற்ற கியூசெப்பி கான்ட்டேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 



    அதைத்தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவரை அந்நாட்டுக்கான இந்திய தூதர் வரவேற்றார். அதன்பின் அங்கு நடைபெற்ற இந்திய கலாச்சார மையத்தின் பெயர் மாற்றும் விழாவில் சுஷ்மா கலந்து கொண்டார். பாரீசில் உள்ள இந்திய கலாச்சார மையம், விவேகானந்தர் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்பின் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #Sushmaswaraj #EmmanuelMacron
    ×