பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை - சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

தமிழ்நாட்டில் ஏராளமாக சுற்றுலா தலங்கள் உள்ளன.கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.
பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை - சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக பல்வேறு சுற்றுலா நிறுவனங்களுடன் 217 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவரது முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

* தமிழ்நாட்டில் ஏராளமாக சுற்றுலா தலங்கள் உள்ளன.

* நமது பாரம்பரியத்தை உலக அளவில் கொண்டு செல்லும் திறன் சுற்றுலா துறைக்கே உண்டு.

* கலைகள், கலைஞர்கள், பண்பாட்டை கொண்டு செல்லும் வலிமை சுற்றுலாத்துறைக்கு உள்ளது.

* தமிழின் தொன்மையும், தமிழர்களின் நாகரிகமும் உலகம் முழுமைக்கும் தெரியும்.

* கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

* சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு உள்ளது.

* பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com